Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai Palangal

Gowthami Subramani Updated:
பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image.

தைப் பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் எனக் கொண்டாடப்படும் நன்னாள் ஆகும். ஆண்டுதோறும், தமிழர்களின் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் திருவிழாவாக தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, விவசாயத்திற்கு நிலத்தை வழங்கிய இந்திர தேவனுக்கும், சூரிய பகவானிற்கும், விவசாயத்திற்கு உதவி வரும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அருமையான தினத்தில், பொங்கல் வைத்து அந்த நாளுக்கு ஏற்றவாறு படைத்து வழிபடுவர். அதன் படி, பொங்கல் பொங்கும் திசையை வைத்து என்ன பலன்களைப் பெறலாம் என்பதை இதில் காணலாம்.

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image

பொங்கல் பொங்கும் திசை

பொங்கல் வைக்கும் போது, அந்த பால் எந்த திசையில் பொங்கி வழிகிறதோ அதன் படியே வரும் ஆண்டு முழுவதும் அமையும் என்றே கூறுவர். இது நம் முன்னோர்களால் கூறப்பட்ட ஒன்றாகும். இதில், எந்த திசையில் பொங்கல் பொங்கினால், என்ன வகையான பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image

மேற்கு திசையில் பொங்கல் பொங்கினால்

பொங்கல் வைக்கும் போது, மேற்கு திசை நோக்கி வழிந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம். அதாவது, வீட்டில் திருமண வயதில் மகன், மகள் இருந்தால் அவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து திருமணம் நடைபெறும். மேலும், திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் சுப செலவுகள் அதிகமாக இருக்கும்.

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image

தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால்

பொங்கலானது, தெற்கு திசையில் பொங்கினால், இந்த ஆண்டு முழுவதுமே மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வீட்டில், திருமணமாகாதவர்கள் இருப்பின், அவர்களுக்குத் தாமதமாகவே திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பொங்கல் தெற்கு திசையில் பொங்கினால், எப்போதும் மிகுந்த சோர்வுடன் இருப்பீர்கள்.

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image

வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால்

பொங்கல் பொங்குவது வடக்கு திசையாக இருப்பின், அந்த ஆண்டு முழுவதும் பண வரவு அதிகமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், அவை சுமூகமாக முடியும். கொடுத்த கடன்கள் சிக்கல்கள் எதுவுமின்றி கைக்குக் கிடைக்கும். வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

பொங்கல் பொங்கும் திசையும், அதன் பலன்களும்! | Pongal Pongum Thisai PalangalRepresentative Image

கிழக்கு திசையில் பொங்கல் பொங்கினால்

சூரிய பகவான் உதிக்கும் கிழக்கும் திசையில் பொங்கல் பொங்கினால், வீட்டிற்கு மிகவும் நல்லதாக அமையும். வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் பேச்சு ஏதேனும் இருப்பின், அது நல்லபடியாக நடக்கும். இவை மட்டுமல்லாமல், வேறு என்ன புதிதாக, வாங்க நினைத்திருந்தாலும், வாங்க முடியும். உங்கள் வீட்டில் வைக்கும் பொங்கல் கிழக்கு திசையில் பொங்கினால், நீங்கள் வாங்க நினைத்தது எல்லாம் விரைவில் வாங்க முடியும். மேலும், ஆடை ஆபரணங்களும் சேரும் வாய்ப்பு உள்ளது.

எந்த திசையில் பொங்கல் பொங்கினால் நல்லது என்பதையும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் இதில் பார்த்தோம். அதன் படி, பொங்கல் பொங்கும் திசையை வைத்து இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்