Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மகா சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! | Dos and Donts in Maha Shivaratri 2023

Gowthami Subramani Updated:
மகா சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! | Dos and Donts in Maha Shivaratri 2023Representative Image.

மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு நான்கு யாமங்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவதன் மூலம் பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும் தினமாகும். இந்த தினத்தில், சிவனுக்கு சிறப்பு பூஜை செய்வர். இந்த நாளில் நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுவர். இத்தகைய சிறப்பு மிக்க தினமான சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என உள்ளன. அவற்றைப் பற்றி இதில் காணலாம்.
 

மகா சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! | Dos and Donts in Maha Shivaratri 2023Representative Image

மகா சிவராத்திரி தேதி மற்றும் நேரம்

ஆண்டுதோறும், மாசி மாதத்தில் மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது இந்த தினமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இந்த சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.
 

மகா சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! | Dos and Donts in Maha Shivaratri 2023Representative Image

மகா சிவராத்திரியில் செய்யக் கூடியவை

மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வேண்டி தூங்காமல், நோன்பு இருந்து வழிபடுவர். இவ்வாறு நோன்பு இருக்கும் போது சிவனின் அம்சங்களைப் பற்றி பாடி படிக்க வேண்டும்.
அந்த வகையில் சிவபுராணம், லிங்காஷ்டகம், கோளாறு பதிகம் படித்தல் போன்றவை நன்மையைத் தரும்.

மேலும், நோன்பு நேரத்தில் திருமந்திரம் படித்தல் மற்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தலும் மிக நன்மையைத் தரும்.

மற்ற நாள்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தலை விட, சிவராத்திரி தினத்தில் உச்சரிப்பது நூறு மடங்கு அருளைத் தரும் எனக் கூறுவர்.

சிவராத்திரி தினத்தில், மாலை 6 மணிக்குள் குளித்து சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு ஓரிடத்தில் இருந்து சிவ சிந்தனையில் தியானம் செய்தாலே போதுமானது.

மகா சிவராத்திரி தினத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! | Dos and Donts in Maha Shivaratri 2023Representative Image

மகா சிவராத்திரியில் செய்யக் கூடாதவை

மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி தினத்தில் நாம் செய்யக் கூடாதவை என சிலவற்றை உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும்.

சிவராத்திரி தினத்தில் அனைவரும் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
இவ்வாறு பக்தர்கள் தரிசனம் செய்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவர்.

எல்லா தானங்களைக் காட்டிலும் அன்னதானம் மிக முக்கிய தானம் ஆகும்.

இருப்பினும், சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வழிபட்டு அன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து உணவு, உறக்கத்தை துரந்து சிவபெருமானை வழிபடுவது சிறப்பைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்