Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாய்பாபா சிலை வீட்டில் வைக்கலாமா? | Can We Keep Sai Baba Statue at Home in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சாய்பாபா சிலை வீட்டில் வைக்கலாமா? | Can We Keep Sai Baba Statue at Home in TamilRepresentative Image.

பொதுவாக பூஜையறையில் என்னென்ன பொருட்கள் மற்றும் படங்களை வைக்க வேண்டும்? வைக்க கூடாது? என்பதற்கு நிறைய ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. அதுபோல் இறந்தவர்களின் படத்தை பூஜையறையில் வைக்கக் கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், மனித உருவில் வாழ்ந்து தற்போது நாம் தெய்வமாக வணங்கும் சாய்பாபாவின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். 

சந்தேகமே வேண்டாம், ஏனென்றால் சாய்பாபா இறந்தாலும் கூட இறவா நிலையை அடைந்தவர். அதாவது ஜீவசமாதி அடைந்தவர். எனவே, அவரின் படத்தை இறந்தவர்களின் படத்திற்கு ஒப்பிடக்கூடாது. சாய்பாபா இறந்தவர் அல்ல புண்ணிய ஆத்மாவாக மாறிய மனித கடவுள் ஆவார். எனவே, தாராளமாக அவரின் படத்தை வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம்.

சாய்பாபா சிலை வீட்டில் வைக்கலாமா? | Can We Keep Sai Baba Statue at Home in TamilRepresentative Image

அவர்மட்டுமல்ல, அவரைபோல பிற மகான்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் படங்களையும் உங்க வீட்டு பூஜை அறையில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், உக்ர தெய்வங்களின் படங்களை மட்டும் வீட்டில் வைக்க வேண்டாம். 

அதேபோல், சாய்பாபா சிலை வீட்டில் வைக்கலாமா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். தாராளமாக வைத்து வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை தோறும் பூஜை, அலங்காரம், நைவேத்தியம் படைத்து, அவருக்கே உரிய பாடல்களை பாடி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அவர் கோடி நன்மைகளை அள்ளிக் கொடுப்பார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்