Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

En Jothidam Endral Enna: எண்களால் நம் வாழ்வில் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமா! 

Manoj Krishnamoorthi July 18, 2022 & 11:31 [IST]
En Jothidam Endral Enna: எண்களால் நம் வாழ்வில் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமா! Representative Image.

பிரபஞ்சம் என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களில் அடங்காத அற்புதமாகும், இந்த பிரபஞ்சம் நம்மை தன்னுள் அடக்கியதுபோல பஞ்ச பூதங்களால் ஆன சக்தியைக் கொண்ட எண்ணற்ற அற்புத உயிரினங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது, நம் முன்னோர்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்திய கலைகளில் ஒன்று எண் கணித முறையாகும், ஆனால் காலப்போக்கில் நாம் அதை மறந்துவிட்டோம்.

இந்த எண் கணித முறை நாம் பிறந்த தேதி எண், கூட்டு எண் மற்றும் பெயர் எண் ஆகியவற்றை பொருத்து அமையும், இது குறித்து அறிய இந்த பதிவு உங்களுக்கு வசதியாக இருக்கும்.

எண் கணிதம் என்றால் என்ன? 

இந்த பிரபஞ்சத்தில் தஞ்சம் கொண்டுள்ள விஷயங்களுக்கும் தனித்தனி சக்தி உண்டு, அந்த சக்தி தகுந்த முறையில் செயல்பட்டால் நன்மையாகும். நன்மை அளிக்கும் வகையில் சக்திகள் அமைய நாம் அந்த சக்தியை ஈர்க்கும்  வண்ணத்தில் இருக்க வேண்டும். நாம் பிறந்த தேதியும் அதன் கூட்டு எண்களையும் மாற்ற இயலாது, நம் பெயரை மாற்றி அதன் எண் அளிக்கும் பலனை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். 

ஏனென்றால் மனிதனின் பெயர் உச்சரிக்கும்போது ஏற்படும் அதிர்வு பிரபஞ்சத்தின் நல்ல ஈர்ப்பைத் தரும், நம் பெயரின் எண் கணிதம் பலமாக அமைந்தால் சாதகமாகும். ஒருவேளை பலம் குறைந்து காணப்பட்டால் நமக்கு உகந்த பலன் அளிக்கும் எண்ணில் பெயர் வைக்க வேண்டும், இதுவே எண் கணிதம் ஆகும்.

பெயரிலும் ஜோதிடம் உள்ளதா?

நமக்கு தெரியாது நம் பெயருக்கும் ஒரு சக்தி உண்டு என்பதும்  நம் பெயர் ஏதாவது ஒரு பெயரை வசிகரிக்கும் என்பதும் தான், இதற்கு காரணம் நம் பெயரின் எழுத்துகளின் வலிமைகளும் அதன் கோர்வையான ஒலியும் சகல சௌபாக்கியத்தை அளிக்கக் கூடியவை.

பெயர் என்பது மனிதன் மட்டமில்லாத தொழில் நிறுவனத்தின் பெயர்களுக்கும் இது பொருந்தும், நம் தொழில் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும்போது அதுவும் சக்தியை ஈர்க்கும். எனவே, வெற்றி அளிக்கும் வகையில் சாதகமான வகையில் பெயர் இருந்தால் செல்வமும் செல்வாக்கும் நம்மை தேடி வரும். 

நவ கிரகங்களிலும் எண் கணிதம் உள்ளதா?

பொதுவாக ஜோதிடம் கிரகங்களின் நிலை மாற்றத்தைப் பொருத்தும் மனிதன் பிறந்த நேரத்தைப் பொருத்தும்  அமையும். எண் கணிதமும் கிரகங்களை எண்ணின் மூலம் உணர்த்தும். எந்தெந்த கிரகத்திற்கு எந்த எண் பலமானது என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரகங்கள்

கிரகங்களுக்கான எண்

சூரியன்

1

சந்திரன்

2

குரு

3

இராகு

4

புதன்

5

சுக்கிரன்

6

கேது

7

சனி

8

செவ்வாய்

9

 

இதுபோன்ற  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: En Jothidam Endral Enna, En Jothidam In Tamil, Numerology Jothidam In Tamil, En Kanitha Peyar Power, Numerology Padi Peyar Vaipathu Eppadi, En Kanitha Jothidam Tamil 2022, Numerology Kiran Nehhrru

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்