Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 Potri

Gowthami Subramani Updated:
வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image.

நவக்கிரகங்களில் ஒன்றாய், முழுமையான சுப கிரகமாகத் திகழ்பவரே குரு பகவான் ஆவார். குரு இருந்தால் கோடிப் பலன் என்றே கூறுவர். அது போலவே, குரு பகவான் ஒருவரது வாழ்விற்குத் தேவையான அனைத்து வகையிலுமே நன்மைகளை அருள்பவர். இவர், அனைத்து விதமான செல்வங்களையும் அருளுகிறார் என்பதால், மற்ற கிரகங்களிடம் இல்லாத தனிச்சிறப்பு குரு பகவானிற்கு உண்டு. குரு பகவானிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை தோறும், குரு பகவானின் 108 போற்றிகளைப் படித்து வேண்டுவோர்க்கு குரு பகவானின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவர். இதில், குரு பகவானை வணங்கி போற்ற வேண்டிய 108 குரு போற்றிகள் பற்றிக் காண்போம்.

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

108 குரு போற்றிகள்

ஓம் அன்ன வாகனனே போற்றி

ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி

ஓம் அபய கரத்தனே போற்றி

ஓம் அரசு சமித்தனே போற்றி

ஓம் அயன் அதிதேவதையனே போற்றி

ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி

ஓம் அறிவனே போற்றி

ஓம் அறிவுக்கதிபதியே போற்றி

ஓம் அறக் காவலே போற்றி

ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் ஆண் கிரகமே போற்றி

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி

ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி

ஓம் உதித்தியன் சோதரனே போற்றி

ஓம் உபகிரகமுடையவனே போற்றி

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் எளியோர்க் காவலே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் ஐந்தாமவனே போற்றி

ஓம் ஏடேந்தியவனே போற்றி

ஓம் கருணை உருவே போற்றி

ஓம் கற்பகத் தருவே போற்றி

ஓம் கடலை விரும்பியே போற்றி

ஓம் கமண்டலதாரியே போற்றி

ஓம் களங்கமிலானே போற்றி

ஓம் கசன் தந்தையே போற்றி

ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி

ஓம் கடகராசி அதிபதியே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி

ஓம் காக்கும் தேவனே போற்றி

ஓம் கிரகாதீசனே போற்றி

ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி

ஓம் குருவே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் குணசீலனே போற்றி

ஓம் குரு பகவானே போற்றி

ஓம் சதுர பீடனே போற்றி

ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் சான்றோனே போற்றி

ஓம் சாந்த மூர்த்தியே போற்றி

ஓம் சிறுமையழிப்பவனே போற்றி

ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி

ஓம் கராச்சாரியனே போற்றி

ஓம் சுப கிரகமே போற்றி

ஓம் செல்வமளிப்பவனே போற்றி

ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி

ஓம் தங்கத் தேரனே போற்றி

ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் தாரை மணாளனே போற்றி

ஓம் த்ரிலோகேசனே போற்றி

ஓம் திட்டைத் தேவனே போற்றி

ஓம் தீதழிப்பவனே போற்றி

ஓம் தூயவனே போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெளிவிப்பவனே போற்றி

ஓம் தேவ குருவே போற்றி

ஓம் தேவரமைச்சனே போற்றி

ஓம் தேவர்குலக் காவலனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் நற்குணனே போற்றி

ஓம் நல்லாசானே போற்றி

ஓம் நற்குரலோனே போற்றி

ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி

ஓம் நலமேயருள்பவனே போற்றி

ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி

ஓம் நாற்கோணப் பீடனே போற்றி

ஓம் நாற்கரனே போற்றி

ஓம் நீதிகாரகனே போற்றி

ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் நேசனே போற்றி

ஓம் நெடியோனே போற்றி

ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி

ஓம் பாடியில் அருள்பவனே போற்றி

ஓம் பிரஹஸ்பதியே போற்றி

ஓம் பிரமன் பெயரனே போற்றி

ஓம் பீதாம்பரனே போற்றி

ஓம் புத்ர காரகனே போற்றி

ஓம் புனர்வசு நாதனே போற்றி

ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் பூரட்டாதிபதியே போற்றி

ஓம் பொற்குடையனே போற்றி

ஓம் பொன்னாடையனே போற்றி

ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி

ஓம் பொன்னிற த்வஜனே போற்றி

ஓம் மணம் அருள்பவனே போற்றி

ஓம் மகவளிப்பவனே போற்றி

ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி

ஓம் மமதை மணாளனே போற்றி

ஓம் முல்லைப் பிரியனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் மீனராசி அதிபதியே போற்றி

ஓம் யானை வாகனனே போற்றி

ஓம் யோகசித்தி சோதரனே போற்றி

ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி

ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

ஓம் வடதிசையனே போற்றி

ஓம் வடநோக்கனே போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வல்லவனே போற்றி

ஓம் வச்சிராயுதனே போற்றி

வியாழன் தோறும் குரு பகவானைப் போற்றிப் பாட வேண்டிய 108 குருபகவான் போற்றிகள்.! | Guru 108 PotriRepresentative Image

ஓம் வாகீசனே போற்றி

ஓம் விசாக நாதனே போற்றி

ஓம் வேதியனே போற்றி

ஓம் வேகச் சுழலோனே போற்றி

ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி

ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் ஹரயே போற்றி

ஓம் வியாழனே போற்றி போற்றி….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்