Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Varamahalakshmi  Viratham | லட்சுமி கடாட்சம் பொங்க செய்யும் வரலட்சுமி விரதம் இருப்பது இவ்வளவு எளியதா?

Manoj Krishnamoorthi August 01, 2022 & 11:30 [IST]
Varamahalakshmi  Viratham | லட்சுமி கடாட்சம் பொங்க செய்யும் வரலட்சுமி விரதம் இருப்பது இவ்வளவு எளியதா?Representative Image.

ஈசனின் சொற்படி அன்னை பார்வதி திருமகள் லட்சுமி தேவியை நினைத்து விரதம் இருந்த திருநாளான வரலட்சுமி விரதம் இந்த வரலட்சுமி விரதமாகும். எதற்காக வரலட்சுமி விரதம் இருக்கிறோம்..? எப்படி இருக்க வேண்டும்..? போன்ற கேள்விக்கு தெளிவான பதில் இந்த பதிவில் பார்க்கலாம்.

வரலட்சுமி விரதம் 2022 ( Varalakshmi Pooja Viratham In Tamil)

வரலட்சுமி விரதம் என்றாலே நமக்கு தெரிந்தது பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், செல்வம் செழிக்க செய்யும் வழிபாடு என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த விரதம் எண்ணற்ற பல நன்மைகளை அளிக்கும் விரதம் தான் வரலட்சுமி விரதமாகும். முக்கியமாக பதினாறு வகை செல்வங்களையும் அளிக்கும் விரதம் இந்த வரலட்சுமி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பின்பற்றப்படும்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் இந்தவிரதம் முறை, முதன் முதலில் அன்னை பார்வதி தேவி திருமகளான லட்சுமி தேவிக்கு விரதம் இருந்தமையால் முருக அவதாரம் தோன்றியதாக புராணக் கதைகளும் உண்டு. மிகவும் சுபிட்சமான இந்த விரதத்தை நாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் ஆகும்.

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள் (Varalakshmi Pooja In Tamil )

கலசம், மஞ்சள், குங்குமம், சந்தனம், நெல், பச்சரிசி, பூ,  எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் (மற்ற பழ வகைகளும் சேர்த்து கொள்ளலாம்), வாழை இலை, நோன்பு கயிறு மற்றும் தீபாராதனை பொருட்கள் (கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவை).

விரத முறை (Varalakshmi Viratham Irupathu Eppadi In Tamil)

விரதம் இருக்கும் முறையின் ஆதி கடமையாகக் கருதப்படுவது வீட்டை சுத்தம் செய்தல் ஆகும், வீட்டை முதல் நாளிலே சுத்தம் செய்து கொள்ளவும். இந்த விரதம் உண்ணா நோன்பு. எனவே இன்றைய தினம் முழுவதும் உணவு உட்கொள்ளக் கூடாது. அதற்கு பதிலாகப் பால், பழம் சாப்பிடலாம்.

  • முதலில் நம் வீட்டில் கிழக்கு திசையில் (ஈசானி மூலையில்) ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பை உருவாக்கி கொள்ளவும். எளிமையாக விரதம் மேற்கொள்ளும் நிலையில் உயரமான பலகை போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மண்டபத்தின் முன் அல்லது பலகையின் மேல் கோலமிட்டு அலங்காரம் செய்து வாசனை பொருட்கள் கொண்டு வீட்டில் புகையிட்டு விளைக்கு ஏற்றி விரதத்தைத் தொடங்கலாம். 
  • கோலமிட்ட பலகையின் மேல் வாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி அல்லது நெல் போடவும். அதில் மஞ்சளால் ஒரு விநாயகர் செய்து வைத்து பூஜைக்கு முன் அங்கு வைக்கவும்.
  • தற்போது பச்சரிசியிட்ட இலையில் ஒரு வெள்ளி அல்லது செம்பு கலசம் வைத்து, அதை மஞ்சள் குங்குமம் திலகமிட்ட பின் கலசத்திற்குள் சிறியளவு பச்சரிசி, விரளி மஞ்சள், எலுமிச்சம்பழம், ஏலாக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஒன்பது நாணயம் அல்லது ஒரு தங்க நாணயம் மற்றும் கதோள கருகுமணி போடவும். 
  • திலகமிட்ட கலசத்திற்கு ஒரு புதிய ஆடையால் அலங்கரித்து கொள்ளவும்.  இறுதியாக மஞ்சள் பூசி தேங்காய் மற்றும் மாவிலையைக் கலசத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும். இந்த தேங்காய் மேல் தேவையான அளவு நோன்பு கயிறு வைத்து கொள்ளவும்.
  • அம்பாளுக்கு மலர் சூடி நம்மாள் முடிந்த நைவேத்தியம் படைத்தல் வேண்டும். பொதுவாக இந்த தினத்தில் அம்பாளுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களான வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் வைத்து கொள்ளவும்.
  • தீப ஆராதனை செய்து நம் குடும்பத்தில் பெரியவர்களிடம் ஆசி பெற்று கொண்டு அந்த நோன்பு கையிற்றை திருமணமான பெண்கள் கழுத்திலும், திருமணமாகாத பெண்கள் வலது கையில் கட்டி கொள்ளலாம். 

மேற்கண்ட இந்த விரத முறையினை பின்பற்றி அம்பாளை வணங்கி வர நம் குடும்பம் செழிக்க மகாலட்சுமி நம் வீட்டில் எப்போதும் குடி கொண்டு சுபிட்சம் அளிப்பார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்