Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்வி செல்வம் இரண்டிலும் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாட்டை எளிமையாக இப்படி செய்யுங்க…! – ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்தி

Gowthami Subramani August 10, 2022 & 12:45 [IST]
கல்வி செல்வம் இரண்டிலும் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாட்டை எளிமையாக இப்படி செய்யுங்க…! – ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்திRepresentative Image.

ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பான நாள்கள் மக்களால் வழிபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆடி மாதத்தில் பௌர்ணமியின் சிறப்பு என்னவென்றால், ஹயக்ரீவர் வழிபாட்டைக் கூறுவர். நாம் எல்லோரும் அறிந்ததே ஹயக்ரீவர் வழிபாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், ஞானத்தைக் கற்றுக் கொள்ளும் வகையிலும் அமைந்த ஒரு சிறப்பான நாளாகும்.

ஏன் ஆடி பௌர்ணமி தினத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடடப்படுகிறது?

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆடி பௌர்ணமி அன்று வரும், திருநட்சத்திரம் தான் ஹயக்ரீவரின் திருநட்சத்திரமாம். இதனால், இந்த சிறப்பான தினத்தில் ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவர்.

ஹயக்ரீவர் தரும் நன்மைகள்

கல்விக் கடவுளாகப் போற்றப்படுபவரே ஹயக்ரீவர் ஆவார். இவர் கல்வி மட்டும் அல்லாமல், வாழ்வில் சிக்கலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுபவர்களுக்கு, எது நல்லது என்றுரைத்து நல்ல முடிவுகளை எடுக்க வைப்பார். நமக்கு ஞானம் வழங்கி நல்ல உரைகளைப் போதித்து, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உதவியாய் இருப்பார்.

நாராயணின் மறு உருவம்

எல்லாம் வல்ல அருள் தரும் ஸ்ரீமன் நாராயணனின் மறு உருவமாக விளங்குபவரே ஹயக்ரீவர். வரலாற்றில், ஹயக்ரீவர் காட்சியளிப்பதற்கான காரணம் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சமயம், இரண்டு அரக்கர்கள், தானே எல்லா தொழிலையும் செய்ய வேண்டும். மக்களை அடிபணிய வைக்க வேண்டும். இந்த உலகில் முதல் அத்தியாயமாய் தோன்றுவதற்குக் காரணமாக விளங்கும் படைத்தல் தொழிலை செய்வதற்கு இவர்களும் முற்பட்டனர். வேதங்களைக் கொண்டு படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மாவிடம் சென்று, அந்த வேதங்களைக் கைப்பற்றி விட்டனர்.

ஹயக்ரீவர் காட்சி

பின்னர், வேதங்களைத் திரும்பப் பெற பிரம்மா வேண்டுதலுக்கு ஹயக்ரீவரே முக்கிய காரணமாய் இருந்தார். இதற்கான முடிவு ஹயக்ரீவர் கையிலே இருந்தது. வேதங்களைக் கைப்பற்றிய அவர்கள் இருவரும் குதிரை முகத்தைக் கொண்டதால், இவரும் குதிரை முகத்தில், கடலுக்கு அடியில் சென்று வேதங்களைக் கைப்பற்றினார். பின், அதனை பிரம்மாவிடம் கொடுத்து, இனி வேதங்களைச் சிறப்பாக கைப்பற்ற வேண்டும் எனவும், அதில் எழும் சந்தேகங்களைத் தீர்ப்பவராகவும் ஹயக்ரீவர் இருந்தார்.

ஹயக்ரீவர் வழிபாடு

ஹயக்ரீவரை தனியாகவும் வணங்கலாம், லட்சுமி ஹயக்ரீவராகவும் வணங்கலாம். பொதுவாக கல்வி இருந்தால், செல்வம் இருக்காது இல்லையெனில், செல்வம் இருந்தால் கல்வி இருக்காது என்று ஒரு சிலர் கூறுவர். ஆனால்,  ஹயக்ரீவர் கல்வியைத் தருவதற்கும், லட்சுமி செல்வத்தைத் தருபவராகவும், லட்சுமி ஹயக்ரீவரை வணங்குவர்.

ஆடி மாதத்தில்

ஆடிப் பௌர்ணமி அன்று காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் ஹயக்ரீவரை வழிபாடு செய்வது சிறப்பு. பெரும்பாலும் காலை 6 மணிக்கு இவ்வாறு செய்வது அனைவருக்கும் சிறந்த பலனைத் தரும்.


ஹயக்ரீவருக்குப் பிடித்த ஹயக்ரீவர் பிரசாதத்தை இப்படி செய்யுங்க…ஹயக்ரீவருக்குப் பிடித்த ஹயக்ரீவர் பிரசாதத்தை இப்படி செய்யுங்க…


வழிபாடு செய்யும் முறை

இந்த வழிபாட்டில் வீட்டில் ஹயக்ரீவர் போட்டோ இருந்தால், ஏலக்காய் மாலை போட்டு வணங்குவது மிகவும் விசேஷமானது.

வாசனை திரவியமான ஏலக்காய், ஹயக்ரீவருக்கு மிகவும் பிடித்தது.

ஹயக்ரீவர் போட்டோ இல்லையென்றாலும், பெருமாள் போட்டோவை வைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து எளிதாக வழிபடலாம்.

பிறகு, இந்த ஏலக்காயை அரைத்து பசும்பால் காய்த்து அதில் சேர்த்து ஹயக்ரீவருக்குப் படைக்கலாம்.

இந்தப் பாலை, வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியோர்கள் ஆகியோர்க்கு வழங்கலாம்.

இவ்வாறு வழிபடும் போது ஹயக்ரீவர் மந்திரத்தை உபயோகிப்பது சிறந்த முறையாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Hayagriva Pooja Procedure | Hayagriva Pooja Procedure in Tamil | How to Do Hayagriva Puja at Home | Punar Pooja Procedure | chakra Puja Vidhi | What is Hayagriva Mantra | Hayagriva Mantra for Success | Hayagriva Mantra for memory power | Hayagriva Mantra Benefits | Hayagriva Mantra 108 Times | Hayagriva Mantra in Tamil | Hayagriva Mantra in Kannada | Hayagriva Mantra for Studies | Hayagriva Mantra Lyrics | Hayagriva Mantra in Telugu | lord Hayagriva Mantra | lakshmi Hayagriva Mantra | lakshmi Hayagriva Mantra in Tamil | Lakshmi Hayagriva Mantra in Kannada | Hayagriva gayatri Mantra | Hayagriva moola Mantra | Hayagriva gayatri Mantra in Tamil | Hayagriva moola Mantra in Tamil | Hayagriva beej Mantra | Hayagriva gayatri Mantra Lyrics in English


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்