Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்கழி மாதத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! இந்த மாசத்துல கல்யாணம் பண்ண கூடாததுக்கு காரணம் இது தான்..!

Gowthami Subramani Updated:
மார்கழி மாதத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! இந்த மாசத்துல கல்யாணம் பண்ண கூடாததுக்கு காரணம் இது தான்..!Representative Image.

மார்கழி மாதம் என்றாலே, அதிகாலையில் குளிர், அந்த குளிரையும் பொருட்படுத்தாது வீடுகளில் பெண்கள் கோலங்கள் போடுதல், கோவில்களில் வழிபடுதல் உள்ளிட்டவை தான் நம் நினைவிற்கு வரும். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கு சிறப்பான பலன்கள் உண்டு. அதே சமயம், ஒவ்வொரு மாதத்திலும் செய்யக் கூடாதது மற்றும் கட்டாயம் செய்யக் கூடியவை என நிறைய உள்ளன. அந்த வகையில், இந்தப் பதிவில் மார்கழி மாதத்தில் செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாததையும் பற்றிப் பார்க்கலாம்.

மார்கழி மாதத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! இந்த மாசத்துல கல்யாணம் பண்ண கூடாததுக்கு காரணம் இது தான்..!Representative Image

மார்கழி மாதம்

அதிகாலை குளிரில், சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து வாசலில் கோலமிட்டு தெய்வ வழிபாடு மேற்கொண்டு இந்த மாதம் முழுவதுமே சிறப்பாக விளங்கக் கூடியதாக அமையும். ஆண்டுதோறும், தமிழ் மாதமான மார்கழி மாதம், டிசம்பர் 16 ஆம் நாள் துவங்குகிறது. இந்த மாதமானது ஒவ்வொருவருக்கும் சிறப்பான மாதமாகவே அமைகிறது. இந்த மாதத்தில், மனித உடலின் சமநிலையையும், ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உகந்த நேரமாக அமைகிறது. இத்துடன், இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதது என ஒரு சில விஷயங்கள் உள்ளன. இந்த மாதத்தில் அதனையும் கடைபிடித்து வருவது மிகச் சிறந்ததாகும்.

மார்கழி மாதத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! இந்த மாசத்துல கல்யாணம் பண்ண கூடாததுக்கு காரணம் இது தான்..!Representative Image

செய்யக் கூடாதவை

மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக் கூடாது எனக் கூறுவர். ஏனெனில், இந்த மிகுந்த குளிர்ச்சியான மாதத்தில் விதைக்கக் கூடிய விதைகள் விரைவாக வளராது எனக் கூறுவர். அதாவது, விதை விதைக்கும் போது, விதை சரியான உயிர்த் தன்மை பெற்று வளராமல் போய் விடும் என்பதாலேயே விதை விதைக்கக் கூடாது எனக் கூறுவர். இந்த காரணத்தால் தான் மார்கழி மாதத்தில் திருமணம் நடத்தக் கூடாது எனக் கூறப்படுகிறது.

மார்கழி மாதத்தில் அதிகாலை நேரம் தூங்கக் கூடாது. அதாவது, சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது. ஆனால், பொதுவாகவே மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தம் நடைபெறும் வேளையிலேயே தூங்கக் கூடாது. அதன் படி 4.30 மணிக்கு எழுந்து குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஏனெனில், அந்த நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்க கூடிய அதீதமான ஆக்ஸிஜன் மிகுந்த சக்தி, இந்த உடலுக்கு ஆண்டு முழுக்க வேண்டுமென்ற நலனைத் தரும்.

மார்கழி மாதத்தில் இரவிலேயே கோலம் போடக் கூடாது. கோலம் என்பது வெறும் அழகுக்காக மட்டும் போடுவதல்ல. அது ஒரு தர்மத்திற்காக இட வேண்டியதாகும். காலையில் எழுந்த பிறகே வாசல் தெளித்து கோலம் இட வேண்டும்.

இவை அனைத்தும் மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை ஆகும்.

மார்கழி மாதத்தில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..! இந்த மாசத்துல கல்யாணம் பண்ண கூடாததுக்கு காரணம் இது தான்..!Representative Image

செய்யக் கூடியவை

மார்கழி மாதத்தில் இதைச் செய்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதில் நிறைய உண்டு. அந்த வகையில், மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

✤ நீங்கள் இருக்கும் இடத்தில் பஜனை செய்தால், அதில் கட்டாம் கலந்து கொள்ள வேண்டும். பஜனையில் சென்று இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

✤ ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை கட்டாயம் படிக்க வேண்டும். புண்ணியங்கள் கிடைக்க நாச்சியாரின் பாசுரங்களையும் மார்கழி மாதத்தில் பாடி வர வேண்டும்.

பக்திக்கு உரிய மாதம், வைகுண்ட ஏகாதசி எனும் அற்புத திருநாளும், ஆருத்ரா தரிசனம் எனும் அருமையான திருநாளும் கொண்டாடக் கூடிய மாதம். எனவே, மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சி மிக்கதாகவும் மார்கழி மாதத்தில் எழுந்து இறைவனின் அடிவணங்கி வேண்டுவோமேயானால், பாவங்கள் விலகி புண்ணியங்கள் கிட்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்