Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஹயக்ரீவருக்குப் பிடித்த ஹயக்ரீவர் பிரசாதத்தை இப்படி செய்யுங்க…

Gowthami Subramani August 08, 2022 & 15:20 [IST]
ஹயக்ரீவருக்குப் பிடித்த ஹயக்ரீவர் பிரசாதத்தை இப்படி செய்யுங்க…Representative Image.

ஹயக்ரீவ பிரசாதம் கல்வி கடவுளான ஹயக்ரீவருக்குப் பிடித்த பிரசாதம் என்பதால், இதனை ஹயக்ரீவப் பிரசாதம் என அழைக்கப்பட்டது. ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று, இந்த பிரசாதத்தை செய்து வழிபடுவதன் மூலம், நல்ல பலன்களைப் பெறலாம் என கூறுவர். இந்தப் பதிவில் ஹயக்ரீவருக்குப் பிடித்த ஹயக்ரீவ பிரசாதத்தை எப்படி செய்யலாம் பற்றிய விவரங்களைப் பற்றி காண்போம்.

ஹயக்ரீவ பிரசாதம் செய்யத் தேவையான பொருள்கள்

1 கப் கடலைப் பருப்பு

1 கப் வெள்ளம்

4 பேரிச்சம்பழம்

3 டேபிள் ஸ்பூன் கொப்புரைத்தேங்காய்

2 டேபிள் ஸ்பூன் கசகசா


கல்வி செல்வம் இரண்டிலும் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாட்டை எளிமையாக இப்படி செய்யுங்க…! – ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்திகல்வி மற்றும் இரண்டிலும் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாட்டை எளிமையாக இப்படி செய்யுங்க…! – ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்தி


ஹயக்ரீவ பிரசாதம் செய்யும் முறை

முதலில் 1 கப் கடலைப் பருப்பை எடுத்துக் கொண்டு, அதனை 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பிறகு, ஊறவைத்த கடலைப் பருப்பை நன்றாக, குக்கரில் வேக வைக்க வேண்டும்.

4 பேரிச்சம்பழத்தை எடுத்து, அதை அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பேரிச்சம்பழத்தின் விழுதை, வேக வைத்த கடலைப் பருப்பில் சேர்க்க வேண்டும்.

பிறகு, வெள்ளத்தை தூள் தூளாக உடைத்து அதை சேர்க்க வேண்டும். மூன்றையும் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.

கொப்புரைத்தேங்காய் மற்றும் கசகசாவை மேலே குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொண்டு அதனை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு Dry யாக வறுத்து, அதனைப் பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், நன்றாக வேக வைத்துக் கொண்டுள்ள கடலைப்பருப்பு, வெள்ளம் மற்றும் பேரிச்சம்பழம் கலவையில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.

அதன் பிறகு, வறுத்து பொடி செய்த கொப்பரை மற்றும் கசகசாவை அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு, தனியே நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனையும் அந்த கலவையில் சேர்த்து, பின்பு வாசத்திற்காக ஏலக்காயைச் சேர்க்க வேண்டும்.

பின்பு, நீங்கள் எதிர்பார்த்த ஹயக்ரீவ பிரசாதம் ரெடியானது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்