Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rameshwaram Temple Online Booking : புண்ணிய பூமி இராமேஸ்வரம் கோவில் இணைய வழி பதிவு..!

Manoj Krishnamoorthi July 11, 2022 & 17:00 [IST]
Rameshwaram Temple Online Booking : புண்ணிய பூமி இராமேஸ்வரம் கோவில் இணைய வழி பதிவு..!Representative Image.

இந்துக்களின் புனைத தலமாகக் காசிக்கு பிறகு கூறப்படுவது இராமேஸ்வரம் ஆகும், சிவனை மூலவராகக் கொண்ட இத்திருத்தலம் இராமர் வழிபட்ட லிங்கம் ஆகும். பல யுகங்களாக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில் தரிசனத்தை இணையத் தளத்தின் மூலம் எப்படி பதிவு செய்கிறது என்பதை இந்த பதிவு தெளிவாக உணர்த்தும்.

ராமேஸ்வர தரிசனம் ( Rameswara Dharsan in Tamil)

முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடிஉஅ பின் அதை தொடர்ந்து 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் தீர்த்தத்தில் நீராட வேண்டும். இந்த கடமைகள் யாவும் முடிந்த பிறகு இறுதியாக இராமநாதசுவாமி தரிசனத்தை அடையலாம். 

தினமும் காலை 5:00 மணி முதல் 1:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் 11:00 மணி வரை இறைவனை தரிசனம் செய்யலாம்

எப்படி பதிவு செய்வது? (How To Book Rameswaram Kovil Dharisanam In Online Tamil)

இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிகொண்ட இராமநாத சுவாமி திருக்கோவில் தரிசனத்தை இணையத் தளத்தின் மூலம் முன்னரே பதிவு செய்ய  https://rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற லிங்கை க்ளிக் செய்யவும். அதன்பிறகு நாம் திருக்கோவிலின் முகப்பு பக்கத்தை அடையலாம்.

முகப்பு பக்கத்தில் இருக்கும் தரிசனம் ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான தரிசனத்தை தேர்ந்தெடுத்து க்ளிக் பண்ணவும், தரிசனம் அனுமதிக்கப்பட்ட தினங்கள் பச்சை நிறத்தில் குறிப்பிட்டு இருக்கும், அதில் நமக்கு தேவையான தினத்தை அழுத்தினால் கீழே காணும் பக்கத்தை அடையலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள  பதிவுகளை நிரப்பிய பின்  கட்டண தொகையைச் செலுத்திய பின் 'சமர்ப்பிக்க' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதற்கு முன்னாள் கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்ளவும். இறுதியாக இ-டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப்படி செல்வது? (How to Go Rameshwaram in Tamil)

  • ஏராளமான பேருந்து வசதிகள் இராமேஸ்வரத்துக்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ளது. 
  • நீங்கள் விமான வழியைத் தேர்ந்தெடுத்தால் அருகாமையில் உள்ள மதுரை விமான நிலையம் வர வேண்டும், அங்கு இருந்து சுமார் 4 அல்லது 5 மணி நேரப் பயணத்திற்கு பிறகு இராமேஸ்வர திருக்கோயிலை அடையலாம்.
  • ஒருவேளை நீங்கள் இரயிலில் வருவதாக இருந்தால் ராமேஸ்வர ரயில் நிலையத்திலிருந்து அரை மணி நேரத்துக்குள் கோவிலை அடையலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: How To Book Rameswaram Kovil Dharisanam In Online Tamil | Rameshwaram Temple Online Booking | How To Book Rameswaram Kovil Dharisanam In Tamil | Rameswaram Kovil Dharisanam Book Seivathu Eppadi | How To Book Rameshwaram Darshan | How To Book Rameshwaram Darshan In Online | How To Book Rameshwaram Dharisanam In Online | Rameswaram Kovil Dharisanam Pathivuthu Seivathu Eppadi  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்