Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் ஆடி பூரம் வழிபாடு செய்வது எப்படி..? | Aadi Pooram 2023 Valipadu Murai In Tamil

Manoj Krishnamoorthi July 03, 2023 & 18:30 [IST]
வீட்டில் ஆடி பூரம் வழிபாடு செய்வது எப்படி..? | Aadi Pooram 2023 Valipadu Murai In TamilRepresentative Image.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும், ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் படைத்து பூஜை செய்து பக்தர்கள் விரதம் இருந்து பின் அம்மன் பிரசாதமான ஆடி மாத கூழை பருகுவர். மேலும் ஆடி மாதத்தின் விஷேசம் என்றால் ஆடி பூரம் தான், இந்த பதிவில் வீட்டிலே அம்மனுக்கு எப்படி ஆடி பூரம் விழா கொண்டாடுவது என்பதைக் காண்போம்.

ஆடி பூரம் சிறப்பு (Aadi Pooram 2023 Valipadu)

சர்வத்தின் ஆதி பொருள் ஈசனின் பாதியான சக்தி அம்பிகையாக அவதரித்த திருநாளே ஆடி பூரம் எனக் கருதப்படுகிறது. இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாகும். பெண்மையின் மகத்துவமான மகப்பேறு வரம் கொடுக்கும் அம்பிகையின் கருணை உள்ளத்தை பறைசாற்றும் உன்னதமான விழாவாகும். இந்த தினத்தில் நாம் அம்பிகைக்கு வளைகாப்பு நடத்த நம் வீட்டில் விரைவில் வளைகாப்பு நடக்கும் யோகம் உருவாகும் என்பது ஐதீகமாகும்.

ஆடி பூரம் வழிபாடு ( Aadi Pooram 2023 Valipadu Murai In Tamil)

நமக்காக நாம் வேண்டாமல் பிறர் நலிக்காக அரும்பாடுபட்டால் நிச்சியம் நம் வாழ்க்கை உயரும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலிகளின் தாலி பாக்கியம் போன்ற நம்பிக்கையின் ஆதாரமான ஆடி பூரம் பெரும் விழா மிகவும் மகத்துவமானதாகும். இந்த தினத்தில் அம்மன் கோவில் மிக விஷேசக் கோலம் கொண்டு இருக்கும், கோவில் சென்று அம்மனை தரிப்பது நன்று.

இருப்பினும், நாம் இல்லறம் கொண்டுள்ள இல்லத்தில் ஆடி பூரம் தினத்தன்று வீட்டில்  அம்மன் வழிபாடு செய்வது வாழ்வின் சௌபாக்கியங்களை அளிக்கும். நம் வீட்டில் அம்மாள் வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

  • நம் வீட்டை சுத்தம் செய்து, முதலில் காலை சூரிய உதயத்திற்கு பிறகு உங்கள் பூஜை அறையில் அம்பிகையின் படத்தைத் தனியாக அலங்காரம் செய்து விளக்கேற்றி வைக்கவும்.
  • வளையல் மாலை அம்மனுக்கு சிறப்பாகும், முக்கியமாக சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறத்தில் வளையல்கள், மஞ்சள், குங்குமம்  வைத்து, அம்மன் படத்திற்கு முன்னால் கோலமிட்டு, சர்க்கரை பொங்கல் வைத்து நெய்வேத்தியம் செய்தல் வேண்டும்.  
  • இந்த விழா, நாம் அம்பிகைக்கு வளைகாப்பு செய்யும் விழாவாகக் கருதப்படுகிறது, எனவே குறைந்தது மூன்று வகையான உணவை அம்மனுக்கு படைக்க வேண்டும்.  
  • ஆடி பூரம் விரதம் என்பது கட்டாயமில்லை, விரதம் இருந்து வழிபாடு செய்வதும் மகத்துவமாகும். இந்த பூஜை இராகு காலம் தவிர மற்ற எந்த வேளையிலும் செய்யலாம். 
  • மனமார செய்யும் பூஜைக்கு பிறகு, உங்களால் முடிந்த அளவு சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் வளையலைத் தானமாகக் கொடுத்தல் வேண்டும். 

இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழியில் ஆடி பூரம் வழிபாட்டை வீட்டிலே நம் கையால் அம்மாளுக்கு செய்து, அம்மன் அருள் பெறலாம்.

ஆடி பூரம் 2023 (Aadi Pooram 2023 Date In Tamil)

அம்பிகையின் விஷேஷமான ஆடி பூரம் திருவிழா இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்