Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

சித்திரை மாதத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! | Things to do in Chithirai Month

Gowthami Subramani Updated:
சித்திரை மாதத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! | Things to do in Chithirai MonthRepresentative Image.

ஆண்டுதோறும், தமிழ் வருடப் பிறப்பாக சித்திரை மாதம் முதல் நாள் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மங்களகரமான நாளில், மக்கள் தங்களுடைய வீட்டில் செல்வமும், வளமும் பெருக வேண்டும் என்றும், இந்த ஆண்டு போல வரும் எல்லா வருடங்களும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் எண்ணுவர். எனவே இந்த நாளில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசிர்வாதம் பெற்று சிறப்பான நாளைத் தொடங்கலாம். மேலும், தமிழ் வருடப்பிறப்பில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சில முக்கிய காரியங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.

சித்திரை மாதத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! | Things to do in Chithirai MonthRepresentative Image

சித்திரை மாதத்தில் செய்ய வேண்டியவை

தமிழ் மாதத்தின் முதல் மாதமாக அனுசரிக்கப்படும் சித்திரை மாதத்தில் தான தர்மங்கள் மேற்கொள்வது சிறப்பைத் தரும்.

பொதுவாக நமக்கு நாம் செய்து கொள்ளும் வேண்டுதல்களை விட, மற்றவர்களுக்காக நாம் செய்யும் உதவியிலேயே கடவுளைக் காணலாம் என்பது இயற்கையின் நியதி. எனவே, தான தர்மங்களில் ஈடுபடுவது மேன்மையைத் தரும்.

சித்திரை மாதமானது கோடை காலத்தின் துவக்கத்தில் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு தானங்கள் வழங்குவது விசேஷமானது.

சித்திரை மாதத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! | Things to do in Chithirai MonthRepresentative Image

எனவே, முடிந்த அளவிற்கு செருப்பு தானம், குடை தானம், விசிறி தானம் போன்றவற்றை செய்யலாம். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் வீட்டு வாசலில் நீர் வைக்கலாம்.

இந்நன்னாளில் செடிகள் நடுவதும், இறை வழிபாடுகளை மேற்கொள்வதும் வளர்ச்சியைத் தரும்.

குளிர்ச்சி மிகுந்த பழங்களைத் தானம் அளிப்பது நன்மையைத் தரும்.

மேலும், தமிழ் புத்தாண்டு தினத்தன்று தங்கம், வெள்ளி நகைகளை வாங்கினால் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

சித்திரை மாதத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! | Things to do in Chithirai MonthRepresentative Image

தமிழ் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தின் முதல் நாளில் மா, பலா, வாழை போன்ற கனிகள் மற்றும் வெற்றிலை பாக்கு, நகைகள், நெல் போன்ற மங்கலப் பொருள்களை தட்டு ஒன்றில் எடுத்து, அதனை வழிபாட்டறையில் வைத்து அதிகாலை எழுந்ததும் காணலாம்.

இந்த சிறப்பு மிக்க நன்னாளில் அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவைப் படைப்பது சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஆகவே, இந்நன்னாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு என ஆறுசுவைகள் கொண்ட உணவு அமைவது சிறப்பு.

மேலும், இந்த தினத்தில் கல்லுப்பு, மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பழம் உள்ளிட்ட மங்கல பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்