Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kedarnath Temple Direction:பஞ்ச கேதார தலங்களுள் ஒன்றான கேதார்நாத் செல்வது எப்படி?

Manoj Krishnamoorthi May 24, 2022 & 15:45 [IST]
Kedarnath Temple Direction:பஞ்ச கேதார தலங்களுள் ஒன்றான கேதார்நாத் செல்வது எப்படி?Representative Image.

பிரபஞ்சத்தின் மூலப்பொருளும் சைவ சமயத்தின் முதற்முழுக் கடவுளுமான பிறை சூடிய சிவனின் ஸ்தலங்கள் என்றாலே மகத்துவம் தான், சிவனின் பெருமை மிக்க ஸ்தலமென்றால் தெற்கே இராமேஸ்வரம் வடக்கே காசி என்றுதான் பெரும்பலனோர் நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால்  சிவ ஆலயங்கள் அனைத்தும்யே பெருமை மிக்கவை ஆகும்,  12 சோதி லிங்க  சிவதலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் வடநாட்டில் மிகவும் பிரபலமானதாகும். நாமும் அந்த கோயிலின் பெயரைப் பற்றி கேட்டு இருப்போம், சரி..! எப்படி அந்த கோயிலுக்கு போவது என்ற ஐயம் மனதில் தோன்றும், இனி அந்த கவலை வேண்டாம்,... கீழே கொடுக்கப்பட்டுள்ள வாசகம் உங்கள் ஐயத்தை மட்டுமின்றி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டும். வாருங்கள்... நம் கேதார்நாத் பயணத்தின் வழியைப் பார்ப்போம்.

கேதர்நாத் கோவில் (Kedarnath Temple Direction)

கங்கை நதியைத் தலையில் கொண்ட பிறை சூடன் சர்வேஸ்வரனின் இந்த திருக்கோயில் கங்கை நதி கிளை நதியான மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயில் மகாபாரதப் போரில் தன் உறவினர்களைக் கொன்ற பாவத்தைப் போக்கப் பாண்டவர்கள் வழிப்பட்ட ஸ்தலமாகும். மனிதன் தன் வாழ்நாளில் செய்த பாவத்தைப் போக்க இத்தலம் ஒரு சிறப்பான ஸ்தலமாகும்.

எண்ணற்ற இயற்கை சீற்றங்களைக் கடந்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் திருக்கோயில் கடுமையான குளிர் பிரதேசத்தில் இருப்பதால் ஏப்ரல்  மாதம் (அட்சய திருதி) முதல் தீபாவளித் திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும்.   
அதிகம் படிப்பவை:
Brahmacharya meaning in tamil - ஞானம் பெறச் செய்யும் பிரம்மச்சரியத்தின் மகிமை!   

 கேதார்நாத் எப்படி செல்வது? (Kedarnath Temple Direction)

உத்தராகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்ட மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. பஞ்ச கேதார தலங்களுள் ஒன்றான கேதார்நாத் கோயில் செல்ல நேரடி சாலை எதுவுமில்லை. எனவே கௌரிகுண்ட் என்னும் இடத்தில் தொடங்கி நடைபாதையாக 14 கி.மீ தூரம் நடந்து தான் செல்ல வேண்டும்.  

தமிழகத்தில் எப்படி தொடங்குவது?

விமானச் சேவையில்  செல்வதாக இருந்தால் முதலில் டெல்லி வந்து அதன்பிறகு சாலையில் ஸ்ரீநகர், ருத்ரபிராய வழியில் செல்ல வேண்டும்.    

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்