Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Go Maruthamalai Temple In Tamil: மேற்கு தொடர்ச்சி மலையில் முருக பெருமான் திருத்தலம.. எப்படி செல்வது?

Manoj Krishnamoorthi July 18, 2022 & 18:00 [IST]
How To Go Maruthamalai Temple In Tamil: மேற்கு தொடர்ச்சி மலையில் முருக பெருமான் திருத்தலம.. எப்படி செல்வது?Representative Image.

அறுபடை வீடு நம் முப்பாட்டன் குன்று இருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும்  குமரன் பக்தர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் கனிவான உள்ளம் கொண்ட தமிழ் மகன் ஆவான். அண்டத்தின் ஆதி பொருள் ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து அவதரித்த குமரன் கோவை மாவட்டத்தில்  அருள்பாலிக்கும் மருத மலை திருத்தலத்திற்கு செல்வோம் வாருங்கள்.

மருத மலை

தினமும் அதிகாலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசன பூஜையில் தொடங்கும் முருக பெருமானின் தரிசனம் இரவு 8:30 மணி வரை கிடைக்கும். தினமும் அபிஷேகம் கொள்ளும் மருத மலை முருகப்பெருமானைத் தரிசிக்க உகந்த காலம் அக்டோபர் முதல் ஜூன் மாதம் ஆகும்.

முருக பெருமானின் முக்கிய திருவிழாவான சித்ரா பௌர்ணமி, ஆடி கிருத்திகை, தை பூசம், திருக்கார்த்திகை என அனைத்து பண்டிகையும் இங்கும் சிறப்பாகும். 

சித்தர் ஜீவ சமாதி

வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகாமை போன்றவற்றை உலகிற்கு பரிசாற்றயவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். இவர் பாம்பு பிடித்து அதை ஆட்டி வைப்பதில் தலை சிறந்தவர், அதுமட்டுமின்றி புறத்தில் இருக்கும் பாம்பு ஒன்றுமில்லை என்றும் அகத்தின் பாம்போ சுகத்தை விரும்பும் விஷம் கொண்டது என்ற கருத்தை அறிவுறுத்தியவர். 

கோவிலின் கிழக்கு பகுதியில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் கொங்கு மண்டலத்தில் பிரபலமான சித்தர் ஆவார்.

எப்படி செல்வது?

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்  வடக்கு திசையில் 15 கீ. மீ கோவையை விட்டு கிழக்கில் அமைந்த மருத மலை நம் மனதிற்கு பிடிக்கும் வகையில் குளுமையான சூழலை கொண்ட இயற்கை கொஞ்சும் மலையாகும்.

  • பேருந்து மார்க்க பயணம் மேற்கொள்வதாக இருந்தால் முதலில் கோவை பேருந்து நிலையம் வர வேண்டும், அங்கிருந்து 10 கி.மி  தொலைவில் மருத மலை உள்ளது. கோவை பேருந்து நிலையில் இருந்து ஏராளமான பேருந்து மருத மலைக்கு உள்ளது.
  • இரயில் பயணத்தில் வருவதாக இருந்தால், கோவை இரயில் நிலையம் வந்த பிறகு 17 கீ.மீ பயணம் செய்தால் மருத மலை  திருத்தலத்தை அடையலாம். 

மேலும் கோவில் தேவஸ்தானம் 3 பேருந்துகளை மலையின் உச்சி வரை பக்தர்களை ஏற்றி சென்று முருக பெருமானின் அருளைப் பெற செய்கிறது.    

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: How To Go Maruthamalai Temple In Tamil | How To Reach Maruthamalai Temple From Coimbatore | Maruthamalai Povathu Eppadi | Maruthamalai Povathu Eppadi In Tamil | How To Reach Maruthamalai Kovil In Tamil | How To Reach Maruthamalai Kovil From Coimbatore | Coimbatore To Maruthamalai Temple Distance | How To Reach Maruthamalai Temple From Coimbatore | Coimbatore Railway Station To Maruthamalai Temple Distance | Maruthamalai Dharisanam Booking | Maruthamalai Temple Timings | Maruthamalai Temple Contact Number | Maruthamalai Dharisanam Booking In Tamil

 

 

 

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்