Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Poosam Natchathiram : பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது?

Manoj Krishnamoorthi September 03, 2022 & 16:45 [IST]
Temple For Poosam Natchathiram : பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது?Representative Image.

மனநிலை தீர்மானிக்கும் சந்திர பகவானை அதிபதியாகக் கொண்ட கடக ராசியின் முதல் நட்சத்திரமான பூசத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது? செல்வதால் என்ன நன்மை? எப்படி செல்வது என்ற கேள்விக்குப் பதிலாக இந்த பதிவு அமையும்.

பூசம் நட்சத்திர கோவில் (Temple For Poosam Natchathiram)

ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட பூச நட்சத்திரக்காரர்கள் கடுமையான பிரச்சனைக்கும் எளிதாக தீர்வு காண்பர். பல விஷயங்களில் ஞானம் பெற்ற பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே இரக்க குணம் கொண்டவர்கள். உணர்ச்சிப்பூர்வமான பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோவில் (Poosam Natchathiram Kovil) பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தல சிறப்பு(Temple For Poosam Natchathiram)

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு இருக்கும் தோஷம் நிவர்த்தியாக அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் செல்ல வேண்டும். இந்த ஆலயம் எங்கு உள்ளது? தஞ்சை மாவட்டத்தில் விளங்குளம் என்னும் ஊரில் சிவனை மூலவராக கொண்ட ஸ்தலமாகும். 

இந்த தலத்தில் சனிபகவான் தெற்கு திசையை நோக்கி மந்தா, ஜேஷ்டா உடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இந்த தலத்திற்கு வந்து ஈசனின் தரிசனம் காண்பதால் அடிக்கடி ஏற்படும் உடல் பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. 

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த திருக்கோவில் வந்து நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் முதலிய எட்டு பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை, உடல் நலக்குறை, திருமண தடை போன்றவை நீங்கும். 

பொதுவாக பூச நட்சத்திரத்தில் ஜனனம் கொண்டவர்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவதால் நிம்மதியான மனநிலை கிடைக்கும். பூச நட்சத்திரக்காரர் இத்திருத்தல சனீஸ்வரரை வழிபட்டால் செய்யும் காரியத்தில் வெற்றி தானாகவே நெருங்கும். அடிக்கடி வரமுடியாத சூழலில் மகா சிவராத்திரி அன்று வந்து இறைவனை தரிசிக்கலாம். 

எப்படி செல்வது? (Poosam Natchathiram  Temple Location)

27 நட்சத்திரத்தில் 8 வது நட்சத்திரம் பூசம் நட்சத்திரத்திற்கு உரிய இந்த திருக்கோயிலுக்கு செல்ல முதலில் தஞ்சாவூர் வர வேண்டும். அதன்பின் பட்டுக்கோட்டையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் 30 கி. மி தொலைவில்  கிழக்கு கடற்கரையில் விளங்குளம் என்னும் ஊரில் அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 

தொடர்புக்கு: 91 97507 84944, 96266 85051

இதுபோன்ற  ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Temple For Poosam Natchathiram | Temple For Poosam Natchathiram In Tamil | Temple For Poosam | Poosam Natchathiram Kovil | Poosam Natchathiram Kovil In Tamil | Poosam Natchathiram Temple Route | Poosam Natchathiram Temple Location | Poosam Natchathiram Temple Contact Number | Poosam Natchathiram Kovil | அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் | பூச நட்சத்திரம் செல்ல வேண்டிய கோவில்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்