Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Go Thirunallar: ஈஸ்வர பட்டம் பெற்ற  கடவுளின்…. திருத்தலம்! இந்த திருக்கோயிலுக்கு எப்படி செல்வது? 

Manoj Krishnamoorthi June 20, 2022 & 17:00 [IST]
How to Go Thirunallar: ஈஸ்வர பட்டம் பெற்ற  கடவுளின்…. திருத்தலம்! இந்த திருக்கோயிலுக்கு எப்படி செல்வது? Representative Image.

ஜெகத்தின் ஆதியும் அந்தமும் சிவன் என்பது சிவனடியாரின் வாக்கு, சிவத்தை மனதில் நினைத்து வாழும் வாழ்க்கை அனைவருக்கும் சாதியமில்லை. யோகத்தில் [பெரிய யோகம் சிவ ஆலயம் கட்டுவது என்பது நாம் அனைவரும் கேட்ட உண்மையாகும்.

தன்னை யார் வணங்கினாலும் தன் சன்னதி வந்து தன்னை தரிசிக்க சிவனின் உத்தரவு இல்லாமல் சிவனை காண்பது என்பது அரியதாகும். அதுபோல சிவனிடமிருந்து ஈஸ்வரப்பட்டம் பெறுவது என்றால் அவ்வளவு சுலபமான செயல் இல்லை, இவ்வாசகத்தில் ஈசனிடம் ஈஸ்வர பட்டம் வாங்கிய ஒரு கிரகத்தின் திருத்தலத்தைப் பற்றி காண்போம்.

ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகம் (Sani Eshwara)

கிரகங்களின் அதிபதி சூரியன் ஆவார், சூரிய தேவரின் மைந்தனான சனீஸ்வர பகவான், மனிதனின் கர்ம வினைப்பயனை அளிக்கும் கர்ம வினையின் அதிபதி ஆகும். மனிதனின் வாழ்வில் சனி பகவான் பெயர்ச்சி மூலம் அட்டம சனி, விரையச் சனி, ஜென்ம சனி என பல்வேறு விதத்தில் வினைப்பயனை அளிப்பார். காக்கையை வாகனமாகக் கொண்ட சனி பகவான் இதனாலே ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகம் சனீஸ்வர பகவான் ஆவார்.

தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் (Karaikal saneeswaran temple)

சனிபகவானின் சீற்றம் குறைய  நள தீர்த்தத்தில் நீராட முந்தைய சாபங்கள் தீரும் கோயில் புதுச்சேரி மாவட்டம் திருநள்ளாறு என்னும் ஊரில் அமைந்துள்ள  தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலாகும்.  தர்ப்பாரண்யேஸ்வரரை மூலவராகக் கொண்ட இந்த திருக்கோயில்  லிங்கம் சுயம்பு மூர்த்தியாகும்.

இத்திருக்கோயில் செல்ல விரும்பும் பக்தர்கள் முதலில் மூலவரைத் தரிசித்து நவகிரகங்களில் இல்லாது தனி சன்னதி கொண்டு இருக்கும் சனீஸ்வர பகவானை தரிசிக்க வேண்டும், இவ்வாறு தரிசித்தால் மட்டுமே சனி தோஷம் நிவர்த்தியாகும்.      

திருக்கோயிலின் சிறப்பு (Thirunallar Saneeswaran Kovil Sirappugal)

முழுமுதற் கடவுள்  விநாயகப் பெருமான் இல்லாத கோயில் என்பது இந்த புவியில் அரிது, இத்திருத்தலத்தில் குடிகொண்டு இருக்கும் விநாயகர்  சொர்ண விநாயகர்  என்னும் திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். 

 இத்திருத்தலத்தில் சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கை  தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், திருமால் முதல் இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன் வரை பலர் வழிபாடு செய்த சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.

சனி தோஷம் நீங்க இத்திருக்கோயில் வந்து வழிபாடு செய்தல் பிரசித்தி பெற்றது, அதுவும் இங்குள்ள நள  தீர்த்தல் நீராடுவதும்,  முந்தைய சாபங்கள் தீர பிரம்ம தீர்த்தத்திலும் நீராடுவது இங்கு பிரசித்தியாகும்.

எப்படி செல்வது? (How to Go Thirunallar) 

புதுச்சேரி மாவட்டம் காரைக்காலிலிருந்து 6 கி,மீ தொலைவில் அமைந்துள்ள திருநள்ளாறு (Thirunallar Tamil Nadu) என்னும் இந்த ஊருக்கு செல்ல பல பேருந்து வசதி உள்ளது.     

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்