Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Identify Kula Deivam: குல தெய்வம் யாரென்று தெரியாதவர்….. குலதெய்வத்தை அறிந்து கொள்வது எப்படி?

Manoj Krishnamoorthi June 23, 2022 & 10:45 [IST]
How to Identify Kula Deivam: குல தெய்வம் யாரென்று தெரியாதவர்….. குலதெய்வத்தை அறிந்து கொள்வது எப்படி?Representative Image.

மனிதன் குடி அமைத்து வாழ தொடங்கிய நால் முதல் இன்று வரை அவன் தனக்கென ஒரு இனம் ஒரு மொழி என்று வாழும் அவன் தன் குலத்திற்குக்கு ஒரு தெய்வத்தை குல தெய்வமாக  வணங்குகிறான். 

தங்கள்  குலத்திற்காக  உயிர் தியாகம் செய்து  உத்தமர்களைக் குல தெய்வமாக  வணங்கியும் வருவது வழக்கமாகும். இந்த வழக்கம் ஆதிகாலம் முதல் இன்று வரை புழக்கத்தில் தான் உள்ளது, ஆனால் தற்போதைய சூழலில் செல்வ  சம்பாதிக்க வேறு ஊருக்குச் செல்லும் நபர்கள்  சிலர் அந்த ஊரில் தங்கிவிடுவர். அதன்பிறகு தங்கள் குல தெய்வ வழிபாட்டை மறந்து விடுவர். இன்னும் சிலரோ  தங்கள் குலதெய்வம் யார் என்பதை (How to Identify Kula Deivam)  மறந்திருப்பர்.

இந்த மாதிரியான நிலை இங்கு பலருக்கு இருக்கும், உங்களுக்கு உங்கள் குல தெய்வம் யார் தெரியவில்லையா..... இவ்வாசகம் மேலும் படியுங்கள் உங்கள் ஐயத்தை தெளிவுபடுத்தும்.

குல தெய்வத்தை அறிவது எப்படி? ( Kula Deivam Kandupidippathu Eppadi Tamil)  

நம் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல நாம் அயராது உழைப்பது உண்டு, இங்கு வாழ்வின் அடுத்த கட்டமென்று நாங்கள் குறிப்பிடுவது வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை ஆகும். குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பதால் நம் வாழ்வில் சில கஷ்டங்கள் இருக்கும். இந்த மாதிரியான கஷ்டங்கள் வரும்போது நமக்கு குல தெய்வத்தின் வழிபாடு  பற்றிய எண்ணம் உதிக்கும். ஆனால் குல தெய்வம் எது என்பது அறியாதவர்கள் (How to Identify Kula Deivam)  என்ன செய்ய வேண்டும்...!

கவலை வேண்டாம்.... உங்கள் வம்சத்தின் (பங்காளிகளின்)  தலைச்சன் பிள்ளையின் ஜாதகத்தை வைத்து அறியலாம். இவர்கள் ஜாதகத்தில் ஐந்து அல்லது ஒன்பதாம் வீட்டில் கிரகங்களின் நிலை ஒரு மாதிரியான அம்சத்தில் இருக்கும். இந்த ஒற்றுமையை வைத்து உங்கள்  குல தெய்வம் யார் என்பதை ஜோதிடர் அறிந்து சொல்வார்.

குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை மண்ணில் ஜனிக்கும்போது அவர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டின் அதிபதி நீச பலத்துடன் இருந்தாலோ அல்லது நீசம் பெற்றிருந்தாலோ  அப்போது குல தெய்வ வழிபாடு அவசியமாகச் செய்ய வேண்டும்  என்பதை உணர்த்தும். ஒரு சிலர் தங்கள் குலத்தில் உதித்த முன்னோர்களைக்  குல தெய்வமாக வழிபாடு செய்திருப்பர் அதையும் தலைச்சன் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். 

குல தெய்வ வழிபாடு என்பது கட்டாயமாக அனைவரும் செய்ய வேண்டிய வழிபாடு ஆகும்.  குறையில்லாத வாழ்க்கை வாழ அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது குல செய்வது நன்மை ஆகும்.  

இதுபோன்ற ஆன்மீக  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்