Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil: உயிர் போன சிறுவனுக்கு, மீண்டும் உயிர்பிச்சை அளித்த சாயிபாபா….!

Gowthami Subramani June 23, 2022 & 10:30 [IST]
Sai Baba History in Tamil: உயிர் போன சிறுவனுக்கு, மீண்டும் உயிர்பிச்சை அளித்த சாயிபாபா….!Representative Image.

Sai Baba History in Tamil: சாயிநாதரைக் காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த கோபால்ராவ் குரு நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம்.

கடந்த பதிவில், சாய் நாதரின் மீது கொண்ட பொறாமையால், மற்ற சீடர்கள் சாய் நாதரைத் தாக்க முற்பட்டனர். இதனால், அவர்கள் ஒரு பெரிய கல்லை எடுத்து சாய் நாதரின் மேல் எறியத் தொடங்கினர். அப்போது, அவர்களது குருவான கோபால்ராவ் சாய் நாதரை நோக்கி வந்த அந்த கல்லை திடீரென அந்தரத்தில் பறக்கச் செய்தார்.

Representative Image.

இதற்குப் பின் நடந்த அதிசயங்கள் அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்ட பதிவில் காணலாம்.


Representative Image. Sai Baba History in Tamil Part 3: சாய்பாபாவைக் காப்பாற்றிய கோபால் ராவ் குரு….! ஆனால், குருவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன தெரியுமா..?


எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டல்லவா..?

இந்த சமயத்தில், சாய்நாதரைத் தாக்குவதற்கு கல் எறிந்த அந்த சிறுவனது தந்தை அழுது கொண்டே சாயிபாபா மற்றும் குரு கோபால்ராவ் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர் அழுது கொண்டு கூறியதாவது, “ஐயா..! மகாபாபியான என் மகன் உங்களைத் தாக்கி விட்டான். ஆனால், தற்போது அவன் உயிரை கடவுள் பறித்துவிட்டார். அவன் பிணமாகக் கிடக்கிறான். நீங்கள் தாம் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து அருள வேண்டும்..!” என்று அழுதவாறு கெஞ்சினார்.

A picture containing person, person

Description automatically generated

எல்லாம் சாயிபாபாவின் கையில்

இதைக்கேட்ட கோபால்ராவ் மிகுந்த வருத்தத்துடன் அந்தப் பெரியவரைப் பார்த்து கண்ணீர் வடித்தார். பின், “ஐயா..! உங்களுடைய மகனை உயிர்த்தெழவைக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னுடைய எல்லா சக்தியையும் என் சீடன் பாபாவுக்குக் கொடுத்து விட்டே. அவனிடமே மன்றாடி உங்களது மகனுக்கு உயிர்ப்பிச்சை கேளுங்கள்” என கோபால்ராவ் கூறினார். ஆனால், அந்தப் பெரியவர் துடி துடித்துப் போனார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 2: மறுபிறவியாக வந்த சாய்பாபா….! சீரடி சாய்பாபா அற்புதங்கள்…


தன்னை கொல்ல முயன்ற ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும் மனப்பாங்கு இந்த சிறுவனுக்கு வருமா..? இதற்கு அவன் ஒப்புக்கொள்வானா என்ற சந்தேகத்தில் இருந்தார். இருந்த போதிலும், மனம் கலங்கியவாறே, பாபாவை அணுகிக் கெஞ்சினார் அந்த பெரியவர்.

A picture containing decorated, old, altar, archDescription automatically generated

மீன்டும் உயிர்த்தெழுந்த சிறுவன்

உடனே, சாயிபாபா அந்த சிறுவனின் உடலை எடுத்து வரச் செய்து, தனது குருநாதருக்கு அருகே வைக்கச் செய்து, அவருடைய பாதங்கள் தலையில் படும்படி செய்தார். உடனே மூச்சு திரும்பி விட்டது. அவன் உயிர்பெற்று எழுந்தவுடன், பாபாவின் காலில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னித்தருளும் படி வேண்டினான்.

“எல்லாம் குருநாதரின் அருள்… அவருடைய காலில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொள்” எனக் கூறி அனுப்பி விட்டார் பாபா.


Representative Image. Sai Baba History in Tamil Part 1: பிராமணராய் பிறந்து முஸ்லீம் தம்பதியினருக்குக் குழந்தையான சாய்பாபா….!


 

குரு கோபால்ராவின் மரணம்

அதே சமயத்தில் குரு கோபால் ராவ்-ன் உயிர் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. குருவின் அருகே அமர்ந்து, விசிறிய படி அமர்ந்திருந்தார். மறுநாள் மாலை நான்கு மணி அளவில் கோபால்ராவ் விதித்த இறுதி நேரம் நெருங்கியது. அப்போது, சீடரான பாபாவை அருகில் அழைத்து, அவரது தலையை மெல்ல வருடிக் கொடுத்து மேற்குத் திசையை அடையாளம் காட்டினார்.

A person wearing a garmentDescription automatically generated with low confidence

புனிதப் பயணத்திற்கு

அதன் படி, கோபால்ராவ் மேற்குத் திசையைக் காட்டி, அந்த திசையை நோக்கிச் செல். உன் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும் என கூறி கண்களை மூடிக்கொண்டார். இவ்வாறே சாயி பாபாவின் புனிதப் பயணம் தொடங்கியது.

பாபாவின் புனிதப் பயணத்தின் தொடக்கத்தையும், அவர் செல்லும் திசையில் நடத்திய அதிசய நிகழ்வுகளையும், இதன் அடுத்த பகுதியில் காண்போம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil | Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Sai Baba History in Tamil | History of Shirdi Sai Baba | Sai Story Tamil | Sai Baba Story Tamil | Sai Baba Stories in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்