Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hayagriva Mantra In Tamil: ஹயக்ரீவர் மந்திரம் தினமும் இப்படி சொல்லி பாருங்க.... சர்வ  கலைகளிலும் நீங்க தான் டாப்.....!

Manoj Krishnamoorthi August 06, 2022 & 09:48 [IST]
Hayagriva Mantra In Tamil: ஹயக்ரீவர் மந்திரம் தினமும் இப்படி சொல்லி பாருங்க.... சர்வ  கலைகளிலும் நீங்க தான் டாப்.....!Representative Image.

கல்வி அதிபதி சரஸ்வதி என்று தான் நமக்கு தெரியும் கலைமகளான சரஸ்வதி வித்தைகளின் திருவுருவம் ஆவாள். அவளின் குருநாதர் எனக் கூறப்படும் பெருமாளின் அவதாரமான ஹயக்ரீவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..... தினமும் இவரை வணங்குவது நம் கலை ஸ்தானத்தை சீர்படுத்தும்.  

பொதுவாக நமக்கு கற்கும் கலையில் சிறந்து விளங்க முடியாதற்கு காரணம் என்னவென்று யூகிக்க முடிகிறதா....? அதிகமாக யோசிக்காதீர் வேறொன்றுமில்லை ஞாபக மறதி, சோம்பல், அலட்சியம் போன்றவையாகத் தான்  இருக்கும். இந்த பிரச்சனை நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மட்டுமின்றி நமக்கும் இருக்கும், அதற்கு கீழ்வரும் மந்திரத்தைத் தினமும் சொல்லி வந்தால் நம் கற்கும் கலையிலும் செய்யும் வேலையிலும் நலன் கிடைக்கும்.

ஹயக்ரிவர் அவதாரம் (Reason Of Hayagriva Avatar)

தலையில் குதிரையும் உடலில் மனிதனுமாக உள்ள ஹயக்ரீவர், காக்கும் தெய்வம்  விஷ்ணு பகவானின் அவதாரமாகும். எதற்காக இந்த அவதாரம்...? 

மது மற்றும் கைடபன் என்னும் குதிரை முகம் கொண்ட  இரு அசுரர்கள் படைக்கும் தெய்வமான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்து கொள்ள...... அதை மீட்க விஷ்ணு எடுத்த அவதாரமே  ஹயக்ரீவர் அவதாரமாகும். சரி எதற்காக வேதங்களை பிரம்மாவிடம் இருந்து எடுத்தார்கள்...? படைக்கும் தொழிலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் வேதங்களை பறித்து கொண்டு பாதாள உலகம் சென்றனர். இவர்களிடம் போர் செய்து வேதங்களை மீட்க விஷ்ணு பகவான் அவர்களைப் போல குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார்.

ஹயக்ரீவர் மந்திரம் ( Hayagriva Mantra In Tamil)

குதிரை என்பது வேகத்தையும் விவேகத்தையும் குறிக்கும், எனவே குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரை மனதில் நினைத்து தினமும் காலையில் உங்கள் வேலையைத் தொடங்கும் முன் அல்லது கலைகள் கற்கும் வேளைக்கு முன் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். 

ஞானானந்தமயம் தேவம் நிர்மல 

ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 

ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”  

தினமும் கூற முடியாத சூழலில் பெருமாளுக்கு உரிய தினமான புதன் மற்றும் சனிக்கிழமையில் கூறலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…



 

Tag: How To Say Hayagriva Mantra In Tamil | Reason Of Hayagriva Avatar In Tamil | Hayagriva Manthiram Enna Tamil | Reason Of Hayagriva Avatar | Hayagriva Manthiram Solvathu Eppadi Tamil |  Hayagriva Manthiram Solvathu Eppadi | Why Did Vishnu Take Hayagriva Avatar | ஹயக்ரிவர் அவதாரம் | ஹயக்ரீவர் மந்திரம் | Hayagriva Mantra In Tamil | Hayagrivar Mantra In Tamil | What Is Hayagriva Mantra

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்