Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அளவற்ற புண்ணியத்தை தரும் மார்கழி அமாவாசை வழிபாடு | Margali Amavasai Valipadu

Nandhinipriya Ganeshan Updated:
அளவற்ற புண்ணியத்தை தரும் மார்கழி அமாவாசை வழிபாடு | Margali Amavasai Valipadu Representative Image.

மார்கழி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆண்டாள் பாடிய திருப்பாவை, கோலங்கள், மார்கழி மாத பஜனையும் தான். அதுமட்டுமல்லாமல், விஷ்ணு மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்யும் சங்கமமாக மார்கழி மாதம் திகழ்கிறது. இவ்வளவு மங்களகரமான மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் விஷேசமான நாளாகும். வாங்க, இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். 

மார்கழி அமாவாசை (23.12.2022) என்பது மிகவும் சிறப்புமிக்க நாளாகும். அதுவும் இந்த வருடம் வெள்ளிக்கிழமை நாளில் வருவது கூடுதல் விஷேசம். அதுமட்டுமல்லாமல், இந்த வருடத்தின் கடைசி அமாவாசை திதியும் கூட. இந்த நாளில் தான் ராம பக்தியில் சிறந்தவரான அனுமன் அவரித்த தினம். அதாவது, அனுமன் ஜெயந்தி. இவ்வளவு விஷேசமான நாளில் மறக்காமல் நம் முன்னோரை ஆராதனை செய்யாதல் வாழ்வில் வளமும் சந்ததியர் நலமும் கிடைப்பது நிச்சயம். 

அளவற்ற புண்ணியத்தை தரும் மார்கழி அமாவாசை வழிபாடு | Margali Amavasai Valipadu Representative Image

வழிபடும் முறை:

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்ய வேண்டும். மறைந்த முன்னோர்களை வழிபட வேண்டும். அந்தவகையில், மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் உங்க வீட்டின் அருகில் ஆற்றங்கரை அல்லது குளக்கரை இருந்தால், அங்கு குளித்து முடித்து, மறைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் தரலாம். அப்படி தர்ப்பணம் தர முடியாதவர்கள் வீட்டிலேயே அவர்களை வழிபடலாம். 

அளவற்ற புண்ணியத்தை தரும் மார்கழி அமாவாசை வழிபாடு | Margali Amavasai Valipadu Representative Image

காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்துவிடுங்கள். பின்னர், வீட்டையும் பூஜையறையையும் சுத்தப்படுத்திவிட்டு, முன்னோர்களின் படங்களையும் சுத்தம் செய்து வைக்க வேண்டும். அடுத்ததாக, அவர்களின் படங்களுக்கு பூக்கள் அணிவித்து, அதுவும் துளசி மாலையாக இருந்தால் ரொம்பவே விஷேசம். ஊதுவர்தி காட்டி, எச்சில் படாத சாதத்தில் சிறிதளவு எள் கலந்து காக்கை வைக்க வேண்டும். 

அதன்பிறகே நீங்க சாப்பிட வேண்டும். அதேபோல், நம் முன்னோர்களை மனதில் நினைத்துக்கொண்டு, நான்கு பேருக்காவது அன்னதானம் செய்யலாம். இது மிகவும் நல்லது. இத்தினத்தில் ராமேஸ்வரம், காவேரி,கங்கை போன்ற புனித கடல், ஆறுகளில் தலைமுழுகி முன்னோர்களை வழிபடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்