Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை.. | Hanuman Jayanthi Viratham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை.. | Hanuman Jayanthi Viratham in TamilRepresentative Image.

ராம காவியம் முழுமை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் அனுமன். இவரை ஆஞ்சநேயர், மாருதி, அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் என பல பெயர்களில் நாம் அழைக்கிறோம். வீரம், புத்தி கூர்மை, சொல் வளம், எளிமையான பக்தி இவற்றிற்கு அடையாளமாக சொல்லப்படும் அனுமன், மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தார். அந்த நாளையே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த 2022 ல் இரண்டு அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறோம். ஜனவரி மாதத்தில் 02 ம் தேதியே ஒரு அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், மற்றொரு அனுமன் ஜெயந்தி நாளை அதாவது டிசம்பர் 23 ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 

சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை.. | Hanuman Jayanthi Viratham in TamilRepresentative Image

சகல ஆனந்தங்களையும் அள்ளிக் கொடுப்பவர் ஆஞ்சநேயர், சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாகவும் விளங்குபவர், இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம். ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினால் அவர்களைக் காக்கும் தெய்வமாக அனுமன் எப்போதும் இருப்பார். இவருடைய பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். அந்தவகையில், அனுமன் ஜெயந்தி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை.. | Hanuman Jayanthi Viratham in TamilRepresentative Image

அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை:

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசத்தை அல்லது விரதத்தை தொடங்க வேண்டும்.

அருகில் உள்ள அனுமன் அல்லது ராமர் ஆலயங்களுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருப்பவர்கள் வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை தரும். 

பழம், அவல், பொரி, இளநீர், சர்க்கரை, கடலை, தேன், வெண்ணெய், பானகம் போன்றவற்றை நைவேத்தியமாக வீட்டிலேயே அனுமனுக்கு படைக்கலாம். உளுந்து, மிளகு மட்டும் சேர்த்து செய்யும் வடை அனுமனுக்கு மிகவும் பிரியமான ஒன்று. வடையை மாலையாக கோர்த்து வீட்டில் உள்ள அனுமன் படத்திற்கு அணிவிக்கலாம். அல்லது அருகில் உள்ள அனுமன் கோவிலிலும் வடை மாலை சாற்றலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும்.

சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை.. | Hanuman Jayanthi Viratham in TamilRepresentative Image

மதிய வேளையில் விரதத்தை முடித்து உணவு எடுத்துக்கொள்ளலாம். சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வழிபாடு செய்தால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

அனுமனை வணங்கும் போது எப்போது அவருடைய வாலை தொட்டு வணங்குங்கள். ஏனெனில் அனுமனின் பலம் அனைத்தும் அவருடைய வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே, வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி (hanuman jayanti 2022 in india) மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாள் அன்று அனைத்து அனுமன் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்