Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்ப காலத்தில் நவராத்திரி விரதம் இருக்கலாமா..? செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன?

Gowthami Subramani September 16, 2022 & 15:40 [IST]
கர்ப்ப காலத்தில் நவராத்திரி விரதம் இருக்கலாமா..? செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன?Representative Image.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உண்ணாவிரதம் இருக்கலாமா இருக்கக் கூடாதா என்ற சந்தேகம் எழும். அவ்வாறு, வரக்கூடிய நவராத்திரி பண்டிகையில் விரதம் இருக்கலாமா..? விரதம் இருக்கும் போது செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

நவராத்திரி நோன்பு

கர்ப்ப காலத்தில் நவராத்திரி நோன்பு இருப்பதால், எந்த வித பிரச்சனைகளும் இல்லை. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் உண்ணா விரதம் இருக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எந்த தடையும் வராமல், உண்ணாவிரதம் இருக்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள், சிறு சிறு இடைவெளிகளில் சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறார்கள். நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பது ஆபத்தில் போய் முடியலாம்.

உண்ணா விரதத்தில் செய்யக் கூடியவை

பல கர்ப்பிணி பெண்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு உண்ணாவிரதம் இருக்க விரும்புவர். இவர்கள் உண்ணாவிரதம் இருப்பது கடினமல்ல என்று கூறினாலும், அதற்கு ஏற்ற சத்தானவற்றை உட்கொள்ளுவதும் அவசியம் ஆகும். கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதம் இருக்கும் போது, கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது முக்கியம் ஆகும்.

இந்த கார்போஹைட்ரேட்டுகள் தசைகள் மற்றும் மூளைக்கு ஆற்றலைத் தரக் கூடியவையாக அமைகின்றன. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக, மெதுவான மற்றும் வேகமான என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. இதில், வேகமான கார்போஹைட்ரேட்டுகள் அதிக வேகத்தில் ஆற்றலை வெளியிடுவதால், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, மெதுவான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது சிறந்தது.

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? 

உண்ணா விரதத்தில் செய்யக் கூடாதவை

உண்ணா விரதத்தில் கர்ப்பிணி பெண்கள், முழு நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளமால் இருக்கக் கூடாது.

இந்த நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவை சரியான முறையில் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

இவ்வாறு எடுத்துக் கொள்ளாத சமயத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

உண்ணாவிரதம் இருக்கும் சமயத்தில் பாதாம், திராட்சை, உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

அதே போல, போதுமான அளவு, பழங்கள் உண்ணலாம். தேங்காய் நீர், மோர், எலுமிச்சை நீர் உள்ளிட்ட பானங்களை சர்க்கரே, ஐஸ்கட்டி சேர்க்காமல் குடிக்கலாம். இது உடலுக்கு சக்தியை அளிக்கக் கூடியவையாக இருக்கும்.

குறிப்பாக, நீரிழவு நோய், இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், போன்ற நோய்களைக் கொண்டுள்ள பெண்கள் கட்டாயம் உண்ணாவிரதத்தை தவிர்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்