Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? 

Nandhinipriya Ganeshan September 16, 2022 & 12:30 [IST]
நவராத்திரி கொலு வைப்பது எப்படி? Representative Image.

Navarathri Golu Padi 2022: மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றிக்கண்ட விழாவினை தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவானது 9 நாட்கள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை 'மகா நவராத்திரி' என்று அழைப்பர். அன்னை சக்தி தேவியின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 

நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, நம் கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவானது, செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதியில் முடிகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொலு வைக்கப்பது வழக்கம். இப்போது கொலு வைக்கும் முறையை பற்றியும், அவற்றின் சிறப்பையும் பார்க்கலாம். 

நவராத்திரி கொலு வைக்கும் முறை: 

நவராத்திரிக்கு எப்பொழுதும் கொலுவில் பொம்மை வைக்க மண் பொம்மையை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த மண் பொம்மைகள் இயற்கையை குறிப்பிட்டு கூறுகிறது. அல்லது மரப்பாச்சி பொம்மைகளையும் அடுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் மொம்மைகளை தவிர்ப்பது நல்லது. 

நவராத்திரியில் இந்த மலர்களை கொண்டே அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் 

முதலில் ஒன்பது படிகளையும் ஒரு வெள்ளை துணியை விரித்து மூட வேண்டும். பின்னர், அதன் மேல் கொலு பொம்மைகளை அடுக்க வேண்டும். இப்போது 9 படிகளிலும் எந்தெந்த பொம்மைகள் வைப்பது என்று பார்க்கலாம். 

கொலு பொம்மை எந்த வரிசையில் அடுக்குவது எப்படி?

கொலு வைப்பதை பலரும் பாரம்பரியமாக வைத்து வருவார்கள். அவர்களுக்கு எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது தெரியும். புதிதாக தங்களின் வீட்டி கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்து அதன் படி வைப்பது அவசியம். கீழிருந்து மேலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

முதல் படி:

புல், செடி, கொடி ஆகியவை ஓரறிவு உயிர்களாகும். இந்த தாவரங்களின் பொம்மைகளை முதல் படியில் வைக்க வேண்டும்.

இரண்டாம் படி:

இரண்டறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சங்கு போன்றவற்றின் பொம்மைகளை இரண்டாம் படியில் அடுக்கி வைக்க வேண்டும்.

மூன்றாம் படி:

மூன்றறிவு உயிர்களான எறும்பு, கரையான் ஆகியவற்றின் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம். 

நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்..

நான்காம் படி:

நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை நான்காம் படியில் வைக்கலாம்.

ஐந்தாம் படி:

பறவைகள், விலங்கினங்கள் இவை எல்லாம் ஐந்தறிவு உயிரினங்கள். இவற்றின் பொம்மைகளை ஐந்தாம் படியில் வைக்கலாம். 

ஆறாம் படி:

ஆறாவது படி மட்டும் எப்பொழுது நமக்கு உரியது. ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உரியது. மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், கடை வியாபாரம் செய்வது போல, நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.

ஏழாம் படி:

மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். அதாவது அரசாண்ட மன்னாதி மன்னர்கள், குருமார்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மனித உருவில் வாழ்ந்து மறைந்த தெய்வங்கள் போன்றோரின் பொம்மைகளை ஏழாம் படியில் வைக்கலாம். 

எட்டாம் படி:

தசாவதாரங்களை உணர்த்தும் விதமாக தசாவதார சிலைகளை அடுக்கி வைக்கலாம் அல்லது நவ கிரகங்களில் வீற்றிருக்கும் நவகிரக நாயகர்களை அடுக்கி வைக்கலாம். தேவர்கள், தேவதைகள், அட்டதிக்கு பாலகர்கள் போன்றவர்களையும் அடுக்கி வைக்கலாம்.

 

ஒன்பதாம் படி:

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் கொடுக்கும் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைக்கலாம். பின்னர் ஆதிபராசக்தி ஆகிய உமையவளை நடுவில் வைக்க வேண்டும். இவற்றோடு நம் விநாயகர் பொம்மையையும் வைக்க வேண்டும். 

நவராத்திரியில் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்

கொலு படிகளின் விளக்கம்: 

முதல் படியிலிருந்து ஒன்பதாவது படி வரை இம்முறையில் அடிக்கி வைப்பதற்கு காரணம், மனிதன் புல், பூண்டு முதலான ஓரறிவுள்ள விஷயங்கள் முதல் தன் அறிவால் கற்றுக் கொண்டு படிப்படியாக ஒன்பதாம் படியில் இறைவனை அடைகிறான் என்பது தான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்