Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

Nemilichery Agatheeswarar Temple: சென்னையில் ஓர் பழமையான சிவ ஆலயம்..! என்னது சதுர வடிவிலான லிங்கமா..!

Manoj Krishnamoorthi June 02, 2022 & 13:15 [IST]
Nemilichery Agatheeswarar Temple: சென்னையில் ஓர் பழமையான சிவ ஆலயம்..! என்னது சதுர வடிவிலான லிங்கமா..!Representative Image.

அண்டத்தில் அனைத்து ஜீவராசியும் வணங்கும் ஆதி பொருள் சிவமாகும், சித்தர்கள் வழிபடக்கூடிய சங்கரனின் திருத்தலத்தில்  மன அமைதி கிடைக்கும். சிவனை மனதில் நினைத்து முத்திபபெறும் சித்தர்களில் அகத்தியரும் ஒரு தீவிர சிவ பக்தர் ஆவார், இவர் பல  சிவலிங்கங்களை ஸ்தாபித்து சிவ ஆலயங்களை உருவாக்கி தாம் ஒரு தீவிர சிவ பக்தர் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளார். 

இவர் உருவாகிய சிவ கோயில்கள் நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளன, அதில் ஒன்று நம் தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னையில் உள்ளது. அதைப் பற்றி இவ்வாசகத்தில் முழுமையாகக் காணலாம்.

கோயிலின் வரலாறு (Nemilichery Agatheeswarar Temple)

தமிழுக்கான முனிவர் என அழைக்கப்படும், அகத்திய முனிவர் சித்த மருத்துவத்தில் தலைசிறந்த சித்தர்களில் ஒருவர்.  முச்சங்க வரலாற்றில் தலைசிறந்த முனிவரான அகத்தியர் உருவாக்கிய சிவ லிங்கங்கள் ஏராளமாகும், தற்போதைய தமிழகத்தின்  தலைநகரான சென்னை மாநகரத்தில் குரோம்பேட்டை நெமிலிச்சேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் உருவாக்கிய இந்த லிங்கம் போக லிங்கம் போக லிங்கமாக இருப்பது நம் வாழ்வில் எண்ணற்ற போகங்களை அள்ளி தரும் வல்லமை கொண்டதாகும்.

அகத்தியரின் வரலாறு பலவிதமாகக் கூறப்பட்டாலும்  அவர் உருவாக்கிய இந்த திருத்தலம் மிகவும் பழமையானது ஆகும், அகத்தியன் உருவாக்கிய இந்த ஆலயம் கங்கை வரை ஆட்சி அமைத்த சோழ பேரரசால் சீரமைக்கப்பட்டது. குலோத்துங்க சோழனால் சீரமைக்கப்பட்ட இந்த திருக்கோவில் பிற்காலத்தில் விஜய நகரப் பேரரசர்களால் தற்போது காணப்படும் நிலையில் மாற்றப்பட்டதாக வரலாறு எடுத்துரைக்கிறது.  

விஜய நகர பேரசு ஆண்டதால் இத்திருத்தலம் இருக்கும் 'நெமிலிசேரி' என்னும் பெயரில் "நெமிலி" என்பதன் பொருள் தெலுங்கில் "மயில்" என்பதாகும். கோயில் அமைந்த காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்த இடம் செருவு எனப்பட்டு பின்னாளில் 'நெமிலிசேரி' என்றானது. 

அகத்தியன் உருவாக்கி வழிபட்ட இத்திருக்கோவிலின் மூலவரான ஏசன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுவார்.

இத்திருக்கோயிலின் சிறப்பு பல வாய்மொழி கதைகளாக உள்ளது, அதிலொன்று இத்த்ர்க்கோயிலில் அம்மாள் ஆனந்த வள்ளி தெற்கை நோக்கி அருள்பாலிப்பது தீராத வினைகளையும் தீர்க்கும் என்பதாகும்.

கோவில் திறக்கும் நேரம் Nemilichery Agatheeswarar Temple)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அய்யன் ஈசன் முகத்தைக் காணலாம். 

எப்படி செல்வது?


அகத்திய முனிவர் உருவாக்கிய சிறப்பு வாய்ந்த சிவ ஆலயமான அகத்திஸ்வரர் ஆலயத்துக்கு எப்படி செல்வது என்பதை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்