Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Navratri Fourth Day : நவராத்திரி 4வது நாள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்குவது நன்மை..?

Manoj Krishnamoorthi September 21, 2022 & 15:30 [IST]
Navratri Fourth Day : நவராத்திரி 4வது நாள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்குவது நன்மை..?Representative Image.

நவராத்திரி தினத்தின் நான்காவது நாள் திருமகளின் சொரூபமான வைஷ்ணவி தேவிக்குரிய தினமாகும். நவராத்திரி முதல் மூன்று நாட்கள் மலைமகளுக்கு உரியதாகும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்குரிய நாட்களாகும்.  இவ்வாசகத்தில் நவராத்திரி நான்காம் நாள்  (Navratri Pooja 2022) வைஷ்ணவி தேவிக்கு என்ன பிரசாதம் செய்து எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பதைக் காணலாம்.  

நவராத்திரி நான்காம் நாள் (Fourth Day Of Navratri Puja)

திருமாலைப் போன்று நீல நிறத்தில் இரு கையில் சங்கு மற்றும் சக்கரம் கொண்ட இறைவி ஆகும். விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட வைஷ்ணவி  தேவி கருடனை வாகனமாக கொண்டவள். நவராத்திரி நான்காவது நாளில் அரிசியை வைத்து கோலமிட்டு லட்சுமி வழிபாடு செய்தல் வேண்டும். 

அம்மாளுக்கு பச்சை நிறத்தில் ஆடை அணிவித்து மல்லிகை, மருக்கொழிந்து வைத்து பூஜிப்பது சிறப்பாகும்,  வைஷ்ணவி தேவிக்கு விஷ்ணு பெருமானின் ஆயுதமான கதை ஆயுதமாகும், மேலும் கையில் வில் கொண்டும் இருப்பாள், அம்மாளுக்கு ரோஹிணி என்ற பெயரும் உண்டு. பூஜையின் போது அம்மாளுக்கு காம்போதி ராகத்தில் இசை அமைப்பது சிறப்பாகும். 

முக்கியமாக செவ்வாய் திசௌ உள்ளவர், லக்கினத்தில்  அல்லது ஜாதகத்தில் திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது நன்மை பயக்கும்.  இந்த பூஜையில் நாம் கலந்து கொள்வதால் நம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். 

மந்திரம் (Navarathri Fourth Day Mantra): 

ஓம் ரோஹிண்யை நம

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே 

சக்ர ஹஸ்தாயை தீமஹி 

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Fourth Day):  

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பிரசாதம் (Fourth Day Of Navratri Prasadam):

இன்று பிரசாதமாக கதம்ப சாதம், உளுந்து வடை, கேசரி, அவல் செய்து வைஷ்ணவி தேவிக்கு படைப்பது நமக்கு செல்வ செழிப்பான வாழ்க்கை அளிக்கும்.  

யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம் 

1st நாள்  4th நாள் 7th நாள்
2nd நாள் 5th நாள் 8th நாள்
3rd நாள் 6th நாள் 9th நாள்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்