Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oldest Murugan Temple:தமிழ் கடவுள் முருகனின் பழமை வாய்ந்த கோவில் சென்னைக்கு பக்கத்திலா...!  

Manoj Krishnamoorthi May 30, 2022 & 18:40 [IST]
Oldest Murugan Temple:தமிழ் கடவுள் முருகனின் பழமை வாய்ந்த கோவில் சென்னைக்கு பக்கத்திலா...!  Representative Image.

மனிதன் நவநாகரீக வளர்ச்சி பெறாத காலத்திலே நம் தமிழகம் நாகரிகத்தின் உச்சத்தில் திளைத்து தமிழுக்கு சங்கம் வைத்து நம் தமிழ்த்தாயின் பெருமை ஊர் அறிய செய்த புகழ் உலகம் அறிந்ததே! ஆனால் ஆதி தமிழன் குறிஞ்சி நில கடவுள் முருகப் பெருமானைத் தமிழ்  கடவுள் என்று கூறினால், அது மிகையாகாது. 

கல்தோன்றி மண் தோன்றா காலத்து முத்தக்குடியின் மூத்தவனான முருகனுக்கு அறுபடை வீடுகள் என சிறப்பு வாய்ந்த கோவில் தமிழகம் முழுவதும் இருந்தாலும், முருகப் பெருமானே தமிழ்  கடவுள், தமிழன் ஆதிகாலம் முதல் முருகனை வணங்கி வருகிறான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மண்ணில் புதைந்த பொக்கிஷமான தமிழனின் பழங்கால கட்டுமானம், நம் தற்போதைய தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மிகவும்  பழமையான கோவில் ஒன்று உள்ளது, அதைப் பற்றி அறிய இவ்வாசகத்தைப் பின்தொடரவும்.

பழமையான கோவில் கண்டுபிடிப்பு?

ஆதி தமிழன் அறிவியல் ஞானத்தில் தலைசிறந்து விளங்கினான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான், அவன் கட்டிடக் கலை மிகவும் வித்தியாசமான முறையாகும். சரி, நாம் அந்த பழமையான கோவில் எங்கு உள்ளது என்ற மையக் கருத்துக்கு வருவோம்....

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் அமைந்துள்ள சாளுவன் குப்பத்தில் இருக்கும் முருகன் கோயிலே நாங்கள் கூறும் பழமையான கோயிலாகும்.

2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இத்திருக்கோயில் தோண்டி கண்டுபிடிக்கப்பட்டது, வழக்கமான இந்து கோயில்கள் வடக்கு திசையில் அமையாது, ஆனால் இத்திருத்தலம் வடக்கு திசையில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் கட்டிடக் கலை 8ம் நூற்றாண்டு கருங்கல் கட்டிடத்தைக் காட்டினாலும் பழமையான (சங்க கால பெரிய செங்கற்கள் மற்றும் பிற்கால மெல்லிய செங்கற்கள்) கட்டுமான முறையாகும். முக்கியமாக இத்திருக்கோயில் பல்லவ காலத்துக்கு முன்பு உருவாக்கப்பட்ட கோவிலாகும்.

சிறப்பு 

  • சங்ககால நூலான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது.
  • வரலாற்று அறிஞர்களின் கூற்றின்படி செங்கடல் செலவில் பெருமைப்படுத்திய வண்ணம் சொப்டமா துறைமுகத்தின்  (தற்போதைய மகாபலிபுரம்)  அடையாளமாக உள்ளது.          

இதுபோன்ற் பல ஆன்மிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்