Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pitru Tarpanam | பித்ரு தோஷம் நிவர்த்தி செய்ய எது சரியான நாள்..

Manoj Krishnamoorthi September 17, 2022 & 09:35 [IST]
Pitru Tarpanam | பித்ரு தோஷம் நிவர்த்தி செய்ய எது சரியான நாள்..Representative Image.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் வினைப்பயன் இவ்வுலகில் உண்டு அவ்வகையில் நாம் செய்யும் செயல் நற்செயலாக இருந்தால் நமக்கு நற்பயன் கிடைக்கும். இதில் யாராவது மாற்று கருத்து சொல்ல முடியுமா! நிச்சியம் முடியாது. ஏனென்றால் அதுவே கரமா ஆகும். சந்திர பிறை தேய்ந்து வளர்ந்து மாதத்தின் இரு பகுதி அமாவாசை மற்றும் பௌர்ணமி எனப்படும். இதில் அமாவாசை தினத்தன்று நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். அதுவும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று நாம் செய்யும் ஒரு செயல் நம் முன்னோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும், நமக்கும் நன்மையாம். அது பற்றி அறிய வேண்டுமா...! பின்தொடர்ந்து படிக்கவும். 

பித்ரு கடன் எதற்கு? (Mahalaya Amavasya Pitru Tarpanam)

மனிதன் பிறந்த ஒருவன் ஆகாம விதிகள் படி நிறைவேற்ற வேண்டிய கடமைகள் ரிஷி கடன், தேவ கடன், மூதாதையர் கடன் என்னும் மூன்று கடமைகள்  ஆகும். இம்மூன்றில் மூதாதையர் (பித்ரு) கடன் மிகவும் முக்கியமானதாகும். ஒருவன் பித்ரு கடன் செய்யாமல் இருப்பது அவன் எத்தனை பிறவி எடுத்தாலும்  அந்த கடன் துரத்தி கொண்டே இருக்கும். 

நீங்கள் நினைக்கலாம் நாம் செய்யும் தான தர்மம் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யுமே? ஆனால் பித்ரு தோஷ தானம் தர்மம் செய்வதால் மட்டும் நீங்காது. எனவே முதலில் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்த பின்னர் தானம் செய்தால் நமக்கு நிச்சியம் புண்ணியம் கிட்டும்.பித்ரு தோஷத்தை நாம் நினைத்த நாட்களில் நிவர்த்தி செய்ய முடியாது. சரி, எப்போது செய்ய வேண்டும் என்பதும் ஆகம விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பித்ரு தோஷத்தை நிவர்த்தி (Pitru Tarpanam) செய்ய  அமாவாசை, வருட பிறப்பு, முன்னோர்கள் இறந்த நாள் ஆகிய மூன்று தினங்கள் உகந்தது ஆகும். அதுவும் மஹாளய அமாவாசை (ஆவணி மாதம் பௌர்ணமி முடிந்த பின் வரும் முதல் அமாவாசை) அல்லது ஆவணி மாத பௌர்ணமி முடிந்த பின் வரும் 14 நாட்களான மஹாளய பட்ஷ நாட்களில் பித்ரு தோஷ நிவர்த்தி செய்வது மிகவும் நல்ல பலன் அளிக்கும். 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்