Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image.

நவகிரகங்களின் அருள் இருந்தால் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள், தடைகள் வந்தாலும் அத்தனையும் உடைத்தெறிந்து நம்மால் வெற்றியை பெற முடியும். அதனால், நவகிரங்களை சுற்றும்போது இந்த நவகிரங்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்களை கூறி வழிபடுவது நவகிரக தோஷங்களை போக்கு நன்மையை பெற முடியும். ஏனென்றால், காயத்ரி மந்திரம் போன்று ஒரு மிகச் சிறந்த மந்திரம் வேறு எதுவுமில்லை. தற்போது, ஒவ்வொரு கிரங்கங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரங்களும், அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.  

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

சூரிய காயத்ரி: 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
பாச ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் சூரிய தசை அல்லது சூரிய புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் சூரிய நாராயணன் படத்தை வைத்து செந்தாமரை மலர்கள் தூவி, கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நிவேதனம் படைத்து சூரிய பகவானை மனதார நினைத்துக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், கிழக்கு பக்கமாக அமர்ந்து கொண்டு சூரிய பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய தோஷம் நீங்கி, அவரின் பரிபூரண அருளை பெறலாம். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

சந்திர காயத்ரி: 

ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி 
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் திங்கட்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் அம்பிகையின் படத்தை வைத்து அரளி மலர்கள் தூவி, பால் சாதம் நிவேதனம் படைத்து அம்பிகையை மனதார நினைத்துக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சந்திரனால் வரும் அனைத்து தோஷங்களும் நீங்கி, அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

செவ்வாய் காயத்ரி: 

ஓம் வீரத்வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தந்நோ அங்காரக ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் செவ்வாய் கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து செண்பக மலர்கள் தூவி, துவரையும் வெண் பொங்கலும் நிவேதனம் படைத்து முருகனை மனதார நினைத்துக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாயினால் வரும் அனைத்து தோஷங்களும் நீங்கி, முருகப்பெருமானின் பரிபூரண அருளை பெறலாம். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

புதன் காயத்ரி: 

ஓம் கஜத் வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி 
தந்நோ புதப் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் புதன் தசை அல்லது புதன் புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் புதன் கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் விஷ்ணு பகவானின் படத்தை வைத்து வெண் காந்தள் மலர்கள் தூவி, புளி சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள புதன் காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் புதனால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளை பெறலாம். அதுமட்டுமல்லாமல், சிறந்த கல்வியாற்றலையும் அறிவையும் பெறலாம். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

குரு காயத்ரி: 

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குருப் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் குரு தசை அல்லது குரு புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் வியாழக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை வைத்து முல்லை மலர்கள் தூவி, கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள குரு காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குருவால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, தட்சிணாமூர்த்தியின் பரிபூரண அருளை பெறலாம். அதுமட்டுமல்லாமல், இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் தனம், தானியம், தொழில் விருத்தி, கல்யாணம், சந்ததி விருத்தி போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

சுக்ர காயத்ரி: 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை அல்லது சுக்கிர புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் வெள்ளிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் மகாலட்சுமியின் படத்தை வைத்து வெண் தாமரை மலர்கள் தூவி, நெய் சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள சுக்கிர காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சுக்கிரனால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறலாம். அதுமட்டுமல்லாமல், இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் செல்வம் சேரும் மற்றும் திருமண தோஷம் அதாவது களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

சனி காயத்ரி: 

ஓம் காகத் வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தசை அல்லது சனி புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் படத்தை வைத்து குருங்குவளை மலர்கள் தூவி, எள் சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, வெங்கடேச பெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதுமட்டுமல்லாமல், இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் தொழிலில் விருத்து ஏற்படும். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

ராகு காயத்ரி: 

ஓம் நாகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு தசை அல்லது ராகு புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் வெள்ளிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் துர்க்கை அம்மனின் படத்தை வைத்து மந்தாரை மலர்கள் தூவி, உளுந்து கலந்த சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள ராகு காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் ராகுவால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, துர்க்கை அம்மனின் பரிபூரண அருளை பெறலாம். அதுமட்டுமல்லாமல், இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ராகுவால் ஏற்படும் நாக தோஷம் விலகி திருமண வாழ்வில் நன்மை ஏற்படும். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.

நவகிரக தோஷங்களை போகும் நவகிரக காயத்ரி மந்திரங்கள்.. எப்படி சொல்ல வேண்டும்? | Navagraha Gayatri Mantra in TamilRepresentative Image

கேது காயத்ரி: 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

ஒருவருக்கு ஜாதகத்தில் கேது தசை அல்லது கேது புக்தி நடந்துக்கொண்டிருந்தால், அவர் திங்கட்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிடுங்கள். பின்னர் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து அன்றைய தினம் காலை பூஜையறையில் விநாயகப் பெருமானின் படத்தை வைத்து அருகம்புல் தூவி, நெய் சாதம் நிவேதனம் படைத்து மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்து விடுங்கள். பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள கேது காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கேது ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி, விநாயகப் பெருமானின் பரிபூரண அருளை பெறலாம். பிறகு மதியம் 12 மணிக்கு மேல் அல்லது மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்