Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மற்றும் பூஜை செய்வது எப்படி? | Purattasi 2023 Viratham Irupathu Eppadi

Gowthami Subramani September 13, 2023 & 04:00 [IST]
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மற்றும் பூஜை செய்வது எப்படி? | Purattasi 2023 Viratham Irupathu EppadiRepresentative Image.

தமிழ் மாதங்களில் ஆன்மீக மாதமாகவே கருதப்படுவது இந்த புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சர்வ சௌபாக்கியங்களையும் தரும் வெங்கடேஷப் பெருமான். இந்த சுப மாதத்தில் வீட்டில் அசைவம் சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது என பெரியவர்கள் கூறுவர். இதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது.

இத்துடன், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் விரதம் மேற்கொண்டு பூஜை செய்தால், நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் இல்லாது அனைத்தும் செல்வமும், வளமும் கிடைக்கும் என்று பொருள்.

புரட்டாசி மாதம் புதன் பகவானுக்கு உரிய மாதம்

தமிழ் வருடத்தில் 6 ஆவது மாதமாக வருவது அற்புதங்கள் தரும் புரட்டாசி மாதமாகும். இந்த மாதத்தில், சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதே போல, கன்னி ராசியின் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். அதனால், இந்தப் புரட்டாசி மாதம் புதன் பகவானுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி ஸ்பெஷல்! பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்.. இப்படி செஞ்சி பாருங்க...

புரட்டாசி சனிக்கிழமை விரதம் எப்படி இருக்கலாம்?

நம்மால் இயன்றவரை நாம் கடவுளுக்கு சிறப்பாகச் செய்வதன் மூலம், தெய்வத்தின் பரிபூரண அருளைப் பெற முடியும். இது பொருள், பிரம்மாண்டம் உள்ளிட்டவற்றைச் சார்ந்தது அல்ல. நம் மனது சார்ந்ததாகும். நாம் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் செயல்படுகிறோமோ, அதற்கான முழு பலன்களைப் பெற முடியும்.

விரதம் கடைபிடிக்கும் முறைகள்

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் கீழ்க்கண்ட முறைகளின் படி விரத முறைகளை மேற்கொண்டால், நம் வாழ்வில் அனைத்தும் வெற்றியே கிடைக்கும்.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை நேரத்தில் 4 முதல் 6 மணிக்குள் எழுந்து விட வேண்டும்.

வீட்டை நன்றாக சுத்தம் செய்து, எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளிக்க வேண்டும்.

பிறகு, பெருமாளுக்கு உகந்த நாமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

அதன் பின், வீட்டில் அழகிய கோலம் இட்டு, மாவிலை தோரணம் கட்டி வீட்டை வைத்துக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, முந்தைய நாளான வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருந்த திரியை எடுத்து விட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் சமயத்திலேயே, நாம் இறைவனுக்கு எளிமையாக ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைக்கலாம்.

பின், வீட்டில் இருக்கும் சொம்பை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து காய வைத்து விடவும். பின் அதற்கு மூன்று நாமம் இட்டு, ஓரிரு நாணயத்துடன் சிறிதளவு அரிசியையும் சேர்க்கவும்.

இந்த சொம்புடன், உங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடுகளுக்குச் சென்று அரிசியை யாசகமாகப் பெற வேண்டும்.

பின், அதே அரிசியைப் பயன்படுத்தி வீட்டில் சமைத்து, பருப்பு, பொரியல் உள்ளிட்டவற்றைச் சேர்த்து படைக்கலாம்.

இவ்வாறு படைக்கும் போது, வாழை இலையில் படைக்க வேண்டும். பின், பெருமாளை வழிபட்டு, பூஜை செய்ய வேண்டும்.

சமைத்த அனைத்து உணவுகளிலிருந்தும் சிறிதளவு எடுத்து, ஒரு இலையில் வைத்து, முன்னோர்களாக வழிபடும் காகத்திற்குப் படைக்கவும்.

மேலும், சமைத்து வைத்த உணவுகளை அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கலாம்.

பெருமாளை வழிபடும் போது “கோவிந்தா, கோவிந்தா” என உச்சரிப்பதன் மூலம், பெருமாளே வீட்டிற்கு வந்து அருள் தருவதாகக் கூறப்படுகிறது.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை... இப்படி வழிபட்டால் இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்