Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது வருகிறது? நேரம்? | When is Rahu Ketu Peyarchi in 2023

Nandhinipriya Ganeshan Updated:
ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது வருகிறது? நேரம்? | When is Rahu Ketu Peyarchi in 2023 Representative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று கருதப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். 

இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்யக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இதில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியானார்கள். 

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது?

இந்த நிலையில் 2023ல் ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி நகரக்கூடியவை. அந்தவகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, 30.10.2023 மதியம் 2.13 (ஐப்பசி மாதம் 13ம் தேதிமணியளவில் ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்