Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரக்ஷா பந்தன் பண்டிகை எப்படி வந்துதுனு தெரியுமா? | Raksha Bandhan 2023 Story in Tamil

Nandhinipriya Ganeshan August 22, 2023 & 11:45 [IST]
ரக்ஷா பந்தன் பண்டிகை எப்படி வந்துதுனு தெரியுமா? | Raksha Bandhan 2023 Story in TamilRepresentative Image.

Raksha Bandhan 2023 Story in Tamil: ரக்ஷ பந்தன் என்பது இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும். ஆனால், இந்த வருடம் ஆனி மாதம் வரும் பௌர்ணமி அன்றே வந்துள்ளது. 'ரக்ஷ்சா பந்தன்' Raksha Bandhan என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்பதை தாண்டி, தற்போது உலகம் முழுவதும் அனைவராலும் உடன் பிறந்தவர்களுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் மேம்படுத்தும் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாளில், சகோதரிகள் தங்களது சகோதரர்கள் கையில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். ராக்கியை ஏற்றுக்கொண்ட சகோதரர்கள், அந்த சகோதரிக்குப் பரிசுப்பொருட்களை வழங்கி உன்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் என உறுதியளிப்பார்கள். எப்போதும் எலியும் பூணையுமாக இருக்கும் சகோதரியும், சகோதரனும் இந்நாளில் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக நாளை கழிப்பார்கள்.  

'ரக்ஷா என்றால் பாதுகாப்பு

பந்தன் என்றால் ரத்த பந்தம்' 

இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கு நெருக்கமானவர்களை சகோதரர்களாக நினைத்து ராக்கியை கையில் கட்டுவார்கள். இவ்வளவு அற்புதமான உறவை போற்றும் ரக்ஷா பந்தன் இன்று நேற்று தொடங்கியது அல்ல. புராணங்களின் படி, மகாபாரத காலத்திலேயே தொடங்கப்பட்டது. இதை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! வாங்க விரிவாக பார்க்கலாம்.

கிருஷ்ணன் - திரௌபதியின் அன்பு

மகாபாரத கதைகளின்படி, ஒருமுறை பகவான் கிருஷ்ணன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த நூல் அவரது விரலை கிழித்து அடிபட்டு ரத்தம் வந்து வலியால் துடித்த போது, அதனை கண்ட  திரௌபதி, தன் புடவையைக் கிழித்து அவரது கையில் ஏற்பட்ட காயத்துக்குக் கட்டு போடுவார். திரௌபதியின் பாசத்தை கண்டு நெகிழ்ந்த பகவான் கிருஷ்ணன், திரௌபதியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டு, 'எப்போதும் இனி உன்னை அனைத்துத் துன்பத்திலிருந்தும் காப்பேன்' என்று வாக்களிப்பார். திரௌபதி கிருஷ்ணன் கையில் துணியைக் கட்டிய அந்த நாளே 'ரக்‌ஷாபந்தன்' என்று சொல்லப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்