Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?

Gowthami Subramani [IST]
Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?Representative Image.

Sai Baba History in Tamil Part 9: கடந்த பதிவில், சாய்பாபாவின் மாய வித்தைகளையும், அவர் சீடரிடம் விளையாடியவற்றையும் பார்த்தோம். காயாக இருந்தாலும், தோட்டத்து மாங்காய் தான் வேண்டும். கடையில் வாங்கிய மாம்பழம் எனக்கு வேண்டாம் என்று சீடரை ஆச்சரியப்படுத்தினார்.


Sai Baba History in Tamil Part 8: பாபாவின் எளிமையான தோற்றத்திற்கு இது தான் காரணமா….?


பக்தர்களிடம் சாய்பாபா கேட்டவை

சாய்பாபா செய்யும் எந்த செயலாக இருந்தாலும், அதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அப்படியாக, சாய்பாபா தன்னைக் காண வந்த பக்தர்கள் சிலரிடம் கோதுமை மூட்டைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல், பக்தர்கள் குழப்பத்தில் இருந்தனர். இருந்த போதிலும், மூட்டை மூட்டையாகக் கோதுமையை சாய்பாபாவிற்கு அளித்தார்கள்.

கோதுமை அரைத்தல்

பின்னர் சாய்பாபாவிற்கு கிடைத்த கோதுமையை அங்கே இருக்கும் பெண்மணிகளிடம் அளித்து, அதனை சிறிது சிறிதாக அரைக்கச் சொன்னார். அந்தப் பெண்மணிகள் அரைக்கும் போது அதில் கொஞ்சம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

ஆனால், சாய்பாபா அவர்களைத் தடுத்து, யாரும் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று கூறி விட்டார்.


Sai Baba History in Tamil Part 7: தண்ணீரில் விளக்கு ஏற்ற முடியுமா..? சாய்பாபா செய்தார்….! எப்படினு பாருங்க….


கடும் பஞ்சத்தில் மக்கள்

இவ்வாறு, கோதுமை மாவு நிறைய சேர்ந்தது. பின்னர், அந்த சமயத்தில் ஊரில் மழை இல்லாமல் கடும் பஞ்சம் நிலை தொடங்கியது. பிறகு, மாவை எல்லோருக்கும் வழங்கினார். கோதுமை மாவைக் கொடுக்க கொடுக்க குறையாமல் இருந்தது. அட்சய பாத்திரம் போல் அள்ள அள்ள குறையாததைக் கண்டு மக்கள் பெரும் ஆச்சரியத்தில் இருந்தனர்.

மீதமிருந்த கோதுமை

மாவு அரைத்தது போக, இன்னும் கோதுமை மீதம் இருந்தது,. சாய்பாபா அதனைத் தாமே அரைக்க முற்பட்டு அரைக்கத் தொடங்கினார். ஆனால், பக்தர்கள் அவர் செய்யும் வேலையைக் கண்டு அதனை அரைக்க முன் வந்தனர். ஆனால், சாய்பாபா தானே செய்கிறேன் என்று அவர்களைத் தடுத்து விட்டார். அதன் பிறகு, சாய்பாபா அரைத்த அந்த மாவினை ஊரின் எல்லையில் இருக்கும் ஏரியில் கொட்டி விடுமாறு பக்தர்களிடம் கூறினார். இவ்வாறு கஷ்டப்பட்டு அரைத்ததை ஏன் ஏரியில் கொட்டச் சொல்கிறார் என எல்லோரும் திகைப்புடன் இருந்தனர்.

நோய் பரவல்

அதனைத் தொடர்ந்து ஷீரடியில் காலரா நோய் பரவல் தொடங்கிற்று. இதை விரட்டி அடிக்கவே, அவ்வாறு செய்ய சொன்னார் என்பது மக்களுக்குப் புரிந்தது. பின்னர், சிறிது சிறிதாக காலரா நோய் குறைந்தது. சாய்பாபாவின் இத்தகைய அருளைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba History in Tamil | Sai Baba History in Tamil Part 9 | Shirdi Sai Baba History Tamil | Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Shirdi Sai Baba History | Original Sai Baba History | Sai Baba Viratham book in Tamil | Sai Baba Viratham Murai | Sai Baba Viratham Story in Tamil | Sai Baba Darshan timings | Sai Baba Vratham Procedure | Sai Baba Fasting Rules | Sai Baba Thursday Fast Procedure | Sai Baba Fasting Procedure | Shirdi Sai Baba Viratham Tamil | Sai Baba Thursday Fast Rules | Sai Baba How to pray | Sai Baba Vrat How to Do | Sai Baba Viratham Rules in Tamil | Sai Baba Fasting Rules in English | Sai Baba Fasting Rules | Sai Baba Fast Rules | Sai Baba Fasting Rules in Tamil | Sai Baba temple Darshan timings


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்