Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன்களை நீக்கி கோடீஸ்வரராக்கும் ஏகாதசி விரதம்! உண்மைச் சம்பவம்!

UDHAYA KUMAR June 10, 2022 & 09:28 [IST]
கடன்களை நீக்கி கோடீஸ்வரராக்கும் ஏகாதசி விரதம்! உண்மைச் சம்பவம்!Representative Image.

சென்னை ஆதம்பாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியேறியுள்ள ஆனந்த் - உஷா தம்பதியரின் கதைதான் இது. ஏகாதசி விரதம் இருந்தால் அப்படி என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்கு, இதுதான் உதாரணமாக கூறமுடியும். ஆரம்பத்தில் நடுத்தர வர்க்கம் என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு மாத செலவுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலையில் இருந்துள்ளார் ஆனந்த்.  கோயம்புத்தூர் அருகே பொள்ளாச்சி பகுதியைச் சார்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆனந்த். அவருக்கு கடவுள் நம்பிக்கை என்பது பெரிய அளவில் இல்லை. பெற்றோருக்காக கோவில் சென்று திரும்புவதுதான் அவரின் அதிகபட்ச கடவுள் நம்பிக்கையாக இருக்கும். 

இன்ஜினியரிங் படித்திருந்தாலும் பெரிய அளவில் சம்பாதிக்க வேலை கிடைக்காமல், ஏதோ ஊரில் ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டு, பின்னர் சென்னையில் நல்ல வேலை ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவரின் போராதகாலம், வீட்டுக் கடனில் மூழ்கி, பேங்க் லோன் எடுத்து மாதா மாதம் வட்டி கட்டும் சூழ்நிலை. அவரின் தந்தைக்கோ சிறுநீரக பிரச்னை இருந்ததாலும், ஆனந்த் 31 வயதை கடந்து வந்ததாலும் உடனடியாக திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்பாவுக்காக திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மனைவியாக வந்த உஷா சதாநேரமும் கடவுளை பூசிப்பவர். 

இப்படி ஒரு காம்பினேஷனில் கணவன் - மனைவியர், சாமி கும்பிட கோவிலுக்கு வற்புறுத்த முதலில் மறுத்தாலும் பின்னர் சண்டை வேண்டாம் என நினைத்து உடன் சென்றார் ஆனந்த். அப்போது அவருக்கு மன அமைதி கிடைப்பதையும் உணர்ந்தார். அந்த நிலையில்தான் ஏகாதசி நாளும் வந்தது. ஒரு உண்மையும் ஆனந்துக்கு புலப்பட்டது. 

உஷா, ஒவ்வொரு ஏகாதசி தினத்திலும் விரதம் இருந்து வருகிறார் என்றும் இந்த விரதத்தை கடைபிடித்தால் கடன்கள் தீர்ந்து நல்ல காலம் பிறக்கும் எனவும் தெரிந்துகொண்டார். ஆனால் அவருக்குத்தான் நம்பிக்கை இல்லையே. 

ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் விரதம் இருக்க உஷா, அதிகாலையிலேயே எழுந்து குளித்து தினந்தோறும் செய்யும் வழக்கமான பூஜைகளை செய்து இறைவனைத் தொழுவார்.  பின் அன்றைய நாள் முழுக்க மகாவிஷ்ணுவை நினைத்து உண்ணா நோன்பு இருப்பார்.  சில சமயங்களில் அதீத தண்ணீர் தாகம் ஏற்படும் பட்சத்தில் மட்டும் சாமிக்கு வைக்கப்பட்ட தீர்த்தத்திலிருந்து கொஞ்சம் குடிப்பார். காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை மற்ற எந்த உணவும் அவர் எடுத்துக் கொள்ளமாட்டார். 

இதனை பார்த்த ஆனந்த், இது முட்டாள்தனம் என்றும், இப்படியே செய்துகொண்டிருந்தால் நீ விரைவில் உண்மையிலேயே இறைவனைச் சேர்ந்துவிடுவாய் என கிண்டல் செய்வார். சில சமயங்களில் சண்டையும் நடக்கும். ஆனால் தொடர்ந்து செய்துவந்த உஷா இதனால் நமக்கு நன்மை நடக்கும் என கூறி வந்தார். 

இரவில் இறைவனுக்கு படைக்கப்பட்ட பழங்களை மட்டும் உண்டு உறங்கச்சென்றுவிடுவார். அடுத்த நாள் காலை வழக்கம்போல எழுந்து குளித்து பூஜை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். ஆனால் ஆனந்த் இதற்கு சம்மதிக்காததால், அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று புளியோதரை, எலுமிச்சை சாதம் மாதிரியான எளிய உணவை வாங்கி சில ஏழைகளுக்கு தர்மம் செய்து வந்தார். 

நாட்களும் உருண்டோடின. கிட்டத்தட்ட 3 - 4 வருடங்களுக்குப் பிறகு, இவர்களுக்கு கடனே இல்லாத நிலை. சொந்தமாக சென்னையிலேயே ஒரு வீடு. கையிலிருந்து கொஞ்சம் பணத்தையும் மிச்சத்தை வங்கி லோனிலும் செட்டில் செய்து, இப்போது அவர்கள் வருமானத்துக்கு ஏற்ப இஎம்ஐ கட்டி வருகின்றனர். கடன் தீர்ந்துவிட்டது எல்லாம் இறைவன் செயல் என்று உஷா கூறும்போதெல்லாம், ஆனந்த்தின் பதில் இதுவாகத்தான் இருக்கும். 

ஆமாண்டி. ஒருத்தன் ராத்திரி பகல் பாக்காம மாடா ஒழச்சி ஓடா தேய்ஞ்சிட்டுருக்கேன். நீ அலேக்கா தூக்கி அவராண்ட கொடு. 

என்னதான் ஆனந்த் இப்படி பேசினாலும், உஷாவுக்கு தெரியும் இதையெல்லாம் நடத்திக்கொண்டிருப்பது யார் என்று? 

ஓம் நாராயணாயநம!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்