Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba Mantra in Tamil: சாய்பாபாவின் இந்த மந்திரத்தை உச்சரித்தால், வெற்றி உங்களைத் தேடி வரும்….!

Gowthami Subramani June 23, 2022 & 09:15 [IST]
Sai Baba Mantra in Tamil: சாய்பாபாவின் இந்த மந்திரத்தை உச்சரித்தால், வெற்றி உங்களைத் தேடி வரும்….!Representative Image.

Sai Baba Mantra in Tamil: சாய்பாபாவின் அருளைப் பெறவும், வாழ்க்கையில் வெற்றி பெற்று சிறந்த இடத்திற்கு செல்லவும், இந்த மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.

சாய்பாபாவின் நாமங்களைப் போற்றிட இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. சிறந்த அனுக்கிரஹங்களைத் தரும் சாய்பாபாவின் இந்த பவித்திரமான வரிகளைப் பாடும் பக்தர்களுக்குத் துணையாய் பாபா வருவார். பலவிதமான நன்மைகள் புரிவார்.

சாய்பாபா மந்திரங்கள்

ஓம் சாய் ஸ்ரீ சாய்

ஜெய ஜெய சாயி

ஓம் ஸ்ரீ நிவாசாய வித்மஹே

சர்வ தேவாய தீமஹி

தந்நோ சர்வ பிரசோதயாத்

-------------------------------------------------

சாயிநாதர் திருவடியே

சஞ்சலம் தீர்க்கும் திருவடியே

நேயம் நிறைந்த திருவடியே

நினைத்ததை அளிக்கும் திருவடியே

தூய பாபா திருவடியே

துணையாய்க் காக்கும் திருவடியே

தீயோர் அறியா திருவடியே

சிறப்பை அளிக்கும் திருவடியே

அன்பர்கருளும் திருவடியே

அல்லல் அகற்றும் திருவடியே

இன்பம் கொடுக்கும் திருவடியே

ஏற்றம் அளிக்கும் திருவடியே

வன்பற்றொழிக்கும் திருவடியே

வாழவைக்கும் திருவடியே

எண்பால் இறங்கும் திருவடியே

ஈடில்லாத திருவடியே

-----------------------------------------------------

வாரும் சாயி, வாரும் சாயி

வாரும் சாயி வாரும் சாயி

பக்தர்கள் உம்மை அழைக்கின்றோம்..!

விருப்பம் நிறைவுற வேண்டும்

பக்தி பலமுற வேண்டும்

வாரும் சாயி வாரும் சாயி….!

 

துக்கம் போக்க வாரும் சாயி

சுகங்கள் வழங்க வாரும் சாயி

சேய்கள் உம்மை அழைக்கின்றோம்

தாய்போல் காக்க வருவீரே

வாரும் சாயி வாரும் சாயி

 

கீர்த்தனம் சாயி, பூஜை சாயி

வாழ்வும் சாயி வளமும் சாயி

கல்வி சாயி, செல்வம் சாயி

கருணைக்கடலே சாயி சாயி

 

அந்தமில்லா அருளே சாயி

அற்புதம் சாயி அரும்புகழ் சாயி

பொற்பதம் சரணம் புகழே சாயி

சீரடி சாயி எங்கள் சாயி

பக்தரின் இன்ப அன்பே சாயி

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மனிதன் தன் வாழ்நாளின் பலனை அடைய முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்