Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which God

Gowthami Subramani Updated:
மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image.

மாசி மகம் தினத்தில், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும் ஒன்று. மாதந்தோறும், மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்துடன் வரக்கூடிய பௌர்ணமி தினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த தினத்தில் வீட்டில் உள்ள நீர் நிலைகளில் நீராடி புண்ணிய பலன்களைப் பெறலாம். இந்த சிறப்பு தினம், எந்த தெய்வத்திற்கு உரியது என்பதையும், அதன் பலன்களையும் பற்றி காண்போம்.
 
மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

மாசி மகம் 2023

மாசி மகம் சிறப்பு தினத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது சிறப்பைத் தரும். இந்த தினத்தில் அங்கு சென்று நீராட முடியாதவர்கள், வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடுவதன் மூலம் மகாமகம் குளத்தில் நீராடுவதன் பலன்களைப் பெற முடியும். இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது சிறந்தது. மேலும், சிவராத்திரி என்றால் சிவனுக்கு உகந்தது. பங்குனி உத்திரம், தைப்பூசம் என்றால் முருகனுக்கு உரியது ஆகும். அந்த வகையில் மாசி மகம் எந்த தெய்வத்திற்கு உரியது என்ற கேள்வி அனைவருக்கும் எழும் ஒன்றாகும். அதே போல, இந்த மாசி மகத்தின் மகத்துவம் பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
 
மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

சிவன்

இந்த மாசி மகம் தினமானது சிவபெருமானுக்கு உரிய சிறப்பு தினமாகவும் கருதப்படுகிறது.

பலன்கள்:

இந்த நாளில் சிவ பெருமானை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

சிவ-சக்தி

சிவபெருமானையும், சக்தியையும் ஒன்றாக வணங்குவதே சிவ சக்தி ஆகும். 

பலன்கள்:

இந்த மாசி மகம் தினத்தில் சக்தியையும், சிவனையும் வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

முருகன்

மாசிமகம் நாளானது முருகப்பெருமானுக்கும் உகந்ததாகும். சிவபெருமானுக்கு, முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த தினம் இந்த மாசி மகம் தினத்தன்றே. 

பலன்கள்:

இந்த சிறப்பு தினத்தில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுவோர்க்கும் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

அம்மன்

இந்த மாசி மகம் சிறப்பானது, அம்மனுக்கு உகந்த தினமாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தில், அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அதனை நம் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

பலன்கள்:

இவ்வாறு அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை நம் நெற்றியில் இட்டு வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். குறிப்பாக, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு எந்த காரியத்தில் வெற்றி என்பது நிச்சயம்.

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

கேது

ஞான மற்றும் முக்திக்கான பலன்களைத் தருபவர் கேது பகவான். இவரை மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி என்றே கூறுவர். எனவே, கேது பகவானும் மாசி மகம் தினத்தில் வணங்க வேண்டிய தெய்வங்களுள் ஒன்றானவர்.

பலன்கள்:

இந்த சிறப்பு புண்ணிய திருநாளில் கேது பகவானை நவகிரக சன்னதியில் வஸ்திரம் சாற்றி வழிபடுவதன் மூலம் அறிவாற்றல் மேம்படும் என்பது ஐதீகம்.

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

பெருமாள்

மாசி மகம் திருநாளானது, பெருமாளுக்கு உகந்த தினமாகவும் கூறப்படுகிறது. இதற்கு தனி வரலாறே உள்ளது. அதாவது, திருமால் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தும், வராக மூர்த்தியாக அவதாரம் எடுத்து பூமியை காத்ததும், இந்த சிறப்பு மாசி மகம் தினத்திலேயே.

பலன்கள்:

பரிபூரண பக்தியுடன், பெருமாளை வழிபடுவதன் மூலம் ஐஸ்வர்யங்கள் பெருகி, அவரின் ஆசி கிடைக்கும்.

மாசி மகத்தில் வழிபட வேண்டிய தெய்வங்களும், கிடைக்கும் பலன்களும்.! | Masi Magam Festival for Which GodRepresentative Image

முன்னோர்களைப் போற்றுதல்

மாசி மகம் தினத்தில் குளங்களில் நீராடுவது மட்டுமின்றி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதும் நலனைத் தரும். ஏனெனில், இந்த மகம் நட்சத்திரமானது பித்ருக்களுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். எனவே, இந்த மாசி மகம் தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்