Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sankatahara Sathurthi 2022: சங்கடங்களை போக்கி சகல நன்மைகளை தரும் மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 17:50 [IST]
Sankatahara Sathurthi 2022: சங்கடங்களை போக்கி சகல நன்மைகளை தரும் மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?Representative Image.

மஹா சங்கடஹர சதுர்த்தி:

ஆரம்பிக்கும் நேரம்: 10.35 PM [ஆகஸ்ட், 14]
முடிவடையும் நேரம்: 09.01 PM [ஆகஸ்ட், 15]

சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருளாகும். அந்த வகையில், விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி அல்லது ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி "மஹா சங்கடஹர சதுர்த்தி" ஆகும். விநாயகப்பெருமானுக்கு உகந்த மகா சங்கடஹர சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகள் இன்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். அதுமட்டுமல்லாமல், சந்திர பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபாடு செய்யலாம். 

அந்த அற்புதமான நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிப்பட்டால் ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதம் மாதம் விரதம் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும், மஹா சங்கடஹர சதுர்த்தி நாளிலாவது விரதம் இருந்து விநாயக பெருமானின் அருளை பெறலாம். மேலும், இந்த நாளில் திருமணமான பெண்கள் விரதமிருந்து கயிறை மாற்றிக்கொள்வார்கள். இதனால், கணவரின் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

சதுர்த்தி நாளன்று, காலையில் குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று, விநாயகப் பெருமானை 11 முறை வலம் வர வேண்டும். 

பின்னர், விநாயகருக்கு உகந்த அறுகம்புல் கொடுத்து, அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டி குட்டிக்கொண்டும், மூன்று முறை தோப்புக்கரணம் போட்டும் வணங்கிவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்ததும், பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிரிது வெல்லம், ஒரு வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்கு கொடுக்க வேண்டும். 

பின்னர்  04.30 - 06.30 மாலை வேலையில் வீட்டிலேயே பால், தேன், கொய்யா, நாவல்பழம், வாழைப்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து வழிபாடு செய்துவிட்டு, விரதத்தை முடித்துக் கொள்ளலாம். 

அதேப்போல், அன்றைய நாளில் மாலை வேளையில் விநாயகருக்கு செய்யும் அபிஷேகங்களை பார்ப்பது அவ்வளவு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். எனவே, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிறகுகூட வீட்டில் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம். 

Tags:

maha sangada hara chaturthi in tamil, maha sankatahara chaturthi 2022 in tamil, sathurthi viratham 2022 in tamil, சதுர்த்தி விரதம் இருக்கும் முறை, sangadahara sathurthi viratham irukum murai, sankatahara sathurthi viratham irukum murai, sangadahara sathurthi viratham palangal, sangadahara sathurthi viratham murai


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்