Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ம வினைகளை நீக்கி புண்ணியம் தரும் பூசமும், அதன் முக்கியத்துவமும்! | Thaipusam Importance in Tamil

Gowthami Subramani Updated:
கர்ம வினைகளை நீக்கி புண்ணியம் தரும் பூசமும், அதன் முக்கியத்துவமும்! | Thaipusam Importance in TamilRepresentative Image.

தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரத்தை அனுசரிப்பதே தைப்பூசம் எனப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதமான தை மற்றும் நட்சத்திரத்தின் பெயரான பூசம் போன்றவற்றை உள்ளடக்கியது. அதாவது, இந்த பூசம் நட்சத்திரமானது திருவிழாவின் போது உச்சத்தில் இருக்கும். இந்த மகத்தான தைப்பூசத் திருநாளானது முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில், விரதம் இருந்து காவடி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்து பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.

கர்ம வினைகளை நீக்கி புண்ணியம் தரும் பூசமும், அதன் முக்கியத்துவமும்! | Thaipusam Importance in TamilRepresentative Image

தைப்பூசத்தின் முக்கியத்துவம்

வேல் காக்கும் நின்ற முகம் ஒன்றே! என முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் சிறப்பாகக் கூறப்படுகிறது. சூரனை வதைப்பதற்காக, முருகப் பெருமான் தனது அன்னையிடம் இருந்து பெற்ற வேலின் அடையாளமாகவே இந்நாள் உள்ளது. புராண வரலாற்றின் படி சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய முப்பெரும் அசுரர்களை ஒழிப்பதற்காக முருகனுக்கு வேல் வழங்கப்பட்டது. சூரனை வதைப்பதற்கு எப்படி முருகனின் வேல் துணை நின்றதோ, கெட்ட கர்மங்களின் சுமையைக் குறைத்து வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு வருவதாகும். நம் வாழ்வில் நேர்மறை எண்ணங்களை அதிகரித்து, முருகப் பெருமானை வேண்டி அருள் பெற வேண்டிய நேரமாகவே “தைப்பூசம்” திருநாள் உள்ளது.

கர்ம வினைகளை நீக்கி புண்ணியம் தரும் பூசமும், அதன் முக்கியத்துவமும்! | Thaipusam Importance in TamilRepresentative Image

தைப்பூசம் முக்கிய நிகழ்வுகள்

இந்து புராணங்களின் படி, தைப்பூச திருவிழாவிற்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இது இரண்டு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒன்று பார்வதி தேவியிடம் இருந்து முருகப் பெருமான் வேல் பெற்ற நிகழ்வு. சிவபெருமான், ஆனந்த தாண்டவம் நடனமாடி தமிழகத்தில் உள்ள சிதம்பரம் சிவன் கோவிலில் தனது நடராஜ வடிவத்தை வெளிப்படுத்தினார். எனவே, இந்த நன்னாளில் முருகன் மற்றும் சிவன் கோவில்களில் பூஜை நடத்தப்படுகிறது. இருப்பினும், முருகப் பெருமானுக்கே இந்த தைப்பூசத் திருவிழா மிகவும் பிரபலமாக உள்ளது.

கர்ம வினைகளை நீக்கி புண்ணியம் தரும் பூசமும், அதன் முக்கியத்துவமும்! | Thaipusam Importance in TamilRepresentative Image

தைப்பூச கொண்டாட்டங்கள்

சிவன் மற்றும் பார்வதி தாயாரின் மகனான முருகப் பெருமான், சுப்பிரமணியன் என அழைக்கப்படுகிறார். அசுரனை வென்ற முருகப் பெருமானைப் போற்றும் வகையில், அவருக்குப் பிடித்தமான மஞ்சள், ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் பூக்களைத் தருகிறார்கள். மேலும், இந்த தினத்தில் பக்தர்கள் கோவிலுக்கு, பால் தண்ணீர், பழங்கள் மற்றும் மலர் காணிக்கைகளைத் தங்களது தோளில் தொங்கவிட்டு முருகன் கோவில்களுக்குச் செல்கின்றனர், இதுவே காவடி என அழைக்கப்படுகிறது. இது மரத்தால் அல்லது மூங்கினால் ஆன துணியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் முருகப் பெருமானின் வாகனமான மயிலின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்