Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Shirdi Sai Smaranai: வியாழக்கிழமை தோறும் துதிக்க வேண்டிய சாய் ஸ்மரணை…!

Gowthami Subramani September 14, 2022 & 18:40 [IST]
Shirdi Sai Smaranai: வியாழக்கிழமை தோறும் துதிக்க வேண்டிய சாய் ஸ்மரணை…!Representative Image.

சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை தோறும், அவரை வழிபட்டு, சாய் ஸ்மரணையைக் கூறி துதித்தால், எல்லா பயன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பதிவில் ஸ்ரீ சாய் ஸ்மரணையைக் காண்போம்.

சாயிநாதர் திருவடியே

சஞ்சலம் தீர்க்கும் திருவடியே

நேயம் நிறைந்த திருவடியே

தீயோர் அறியாத் திருவடியே

அன்பர்க் கருளும் திருவடியே

அல்லல் அகற்றும் திருவடியே

இன்பம் கொடுக்கும் திருவடியே

ஏற்றம் அளிக்கும் திருவடியே

வன்பற்றொழிக்கும் திருவடியே

வாழ வைக்கும் திருவடியே

எண்பால் இரங்கும் திருவடியே

ஈடில்லாத திருவடியே

 

 

 

வாரும் சாயி.., வாரும் சாயி..!

வாரும் சாயி.., வாரும் சாயி..!

வணங்கி உம்மை அழைக்கின்றோம்

விருப்பம் நிறைவுற வேண்டும்

பக்தி பலமுற வேண்டும்

வாரும் சாயி வாரும் சாயி

 

துக்கம் போக்க வாரும் சாயி

சுகங்கள் வழங்க வாரும் சாயி

சேய்கள் உம்மை அழைக்கின்றோம்

தாய்போல் காக்க வருவீரே

கீர்த்தனம் சாயி பூஜை சாயி

வாழ்வும் சாயி வளமும் சாயி

கல்வி சாயி செல்வம் சாயி

கருணைக்கடலே சாயி சாயி

 

அற்புதம் சாயி அரும்புகழ் சாயி

பொற்பதம் சரணம் புகழே சாயி

சீரடி சாயி எங்கள் சாயி

பக்தரின் இன்ப அன்பே சாயி

 

அருள்கண் காட்டிப் பாரும் சாயி

அல்லல் எல்லாம் தீரும் சாயி

சீரும் சிறப்பு நீரே சாயி

வாரும் சாயி வாரும் சாயி

 

கிழக்கும் சாயி, மேற்கும் சாயி

தெற்கும் சாயி, வடக்கும் சாயி

மெழுகாய் உருகும் உள்ளம் சாயி

எந்த திசையில் இருந்தும் சாயி

எங்கள் சாயி வாரும் சாயி

இங்கே இனிதே வாரும் சாயி

 

சாந்தம் சாயி சத்தியம் சாயி

காந்த விழியால் கவரும் சாயி

ஓமும் சாயி உயர்வும் சாயி

ஷேமம் சாய் சீரடி சாய்

வாரும் சாயி வாரும் சாயி

வளமும் நலமும் தாரும் சாயி

இந்து சாயி, முஸ்லீம் சாயி

இயேசு சாயி, ஈசன் சாயி

சொந்தம் சாயி பந்தம் சாயி

அந்தமில்லா அருளே சாயி

 

ஞானம் சாயி மோனம் சாயி

நண்பர் சாயி, நட்பு சாயி

உற்றார் சாயி உறவே சாயி

உடனே வாரும் வாரும் சாயி

 

பக்தி சாயி முக்தி சாயி

சக்தி சாயி சித்தி சாயி

பிரம்மா விஷ்ணு சிவனே சாயி

பிரணவப் பொருளே பெரிய சாயி

 

சத்தியம் சாயி சாஸ்வதம் சாயி

புத்தியும் சாயி புலன்களும் சாயி

ஈகை இரக்கம் எளிமை சாயி

சோகம் துக்கம் நீக்கும் சாயி

எண்ணும் எண்ணம் எல்லாம் சாயி

பண்ணும் செயல்கள் பலவும் சாயி

அங்கும் இங்கும் எங்கும் சாயி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்