Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 12: சாய்பாபாவின் சக்தியை சோதித்த பக்தன்.. பிறகு நேர்ந்தது என்ன தெரியுமா..?

Gowthami Subramani September 08, 2022 & 06:00 [IST]
Sai Baba History in Tamil Part 12: சாய்பாபாவின் சக்தியை சோதித்த பக்தன்.. பிறகு நேர்ந்தது என்ன தெரியுமா..?Representative Image.

சீரடி மக்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் அதிசயத்தைக் காட்டி, அவர்களை வியப்படையச் செய்கிறார் சாய்பாபா. அதே சமயம், சாய்பாபாவின் இரவு நேர அதிசயத்தைக் காண வரும் மக்களின் தூக்கம் கெடுவதால், அவரின் இரவு நேர அதிசயத்தை நிறுத்தி விட்டாராம். அது மட்டுமல்லாமல், பாபா தனது அற்புத சக்திகளை என்றுமே வெளிக்காட்ட முயன்றதில்லை என்று பார்த்தோம். அதனைத் தொடர்ந்து இந்த பதிவில், சாய்பாபா எந்த வகையில் மக்களுக்கு அதிசயத்தைத் தர இருக்கிறார் என்பதைப் பற்றிக் காண்போம்.


Representative Image. Sai Baba History in Tamil Part 11: இரவிலும் தூங்காமல், சாய்பாபாவின் அற்புதத்தைக் காண சென்ற ஷீரடி மக்கள்…! இதற்கு சாய்பாபா என்ன செய்தார் தெரியுமா..?


சவால் விடும் பக்தர்கள்

சில பேர், பாபாவின் அபூர்வ சக்தியை ஏற்கச் சவால் விடுவார்கள். அதன் படி, கனோபா என்ற தன வந்தரின் மகன் ஹரி என்பவர், இப்படி ஒரு சவாலை விடுத்து, அவரிடம் தரிசிக்க வந்தார். அந்த சமயத்தில் மசூதியின் வாசலில் செருப்பை விட்டு விட்டு உள்ளே சென்று பாபாவைத் தரிசித்தார். பின்னர், பாபா புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்து அனுப்பி விட்டார்.

பிறகு, ஹரி வேண்டும் என்றே தனது செருப்புகளை மசூதியின் வாசலிலேயே விட்டு விட்டு சென்று விட்டார். அவை தன்னிடம் திரும்பி வந்தால் பாபாவின் சக்தியை ஏற்றுக் கொள்வதாக நண்பர்களிடம் சவால் விட்டார்.

ஹரியிடம் திரும்பி வந்த செருப்புகள்

அதன் பிறகு ஒரு நாள் கழித்து, ஒரு மராத்தியச் சிறுவன் ஒருவன் மரக்கழியில் இரண்டு செருப்புகளை எடுத்துக் கொண்டு ஹரியைப் பார்க்க வந்தான். பின் ஹரி அந்த சிறுவனிடம், “நீ யார்..? இந்த செருப்புகள் உனக்கு எப்படி கிடைத்தன..?” என்று கேட்டான். இதற்கு, அந்த சிறுவன் உங்கள் பெயர் ஹரியா..? உங்கள் தகப்பனார் பெயர் கனோபாவா..? என்று கேட்டான். இதைக் கேட்ட ஹரி வியப்படைந்தார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 10: பாபாவின் உயிர் பிரிந்ததாக எண்ணிய ஷீரடி மக்கள்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?


அது மட்டுமல்லாமல், “உங்கள் வீட்டில் உங்களுக்கென்று ஜரிகைத் தலைப்பாகை இருக்குமே?” என்று கேட்டான். இதனை வியப்புடன் கேட்ட ஹரி “ஆம்” என்று பதில் கூறினான். அதன் பின், அந்த சிறுவன் “பாபா உங்களுடைய செருப்புகளைத் தான் திருப்பி அனுப்பியிருக்கிறார்” எனக் கூறி செருப்புகளைக் கீழே போட்டு விட்டு அந்தப் பையன் ஓடி விட்டான்.

பாபாவிடம் மன்னிப்பு கேட்ட ஹரி

அதன் பிறகு, ஹரி உடலெல்லாம் வியர்வை பொங்க, மெய் சிலிர்த்தவராய் பாபாவைத் தேடி ஓடி வந்தார். அதன் பின், அவருடைய கால்களில் விழுந்து கண்ணீர் பெருகி “சுவாமி… உங்களைச் சோதிக்க முயன்றேனே?” என்று கூறிக் கண்ணீர் மல்க அழுது அவருடைய பாதங்களை ஒற்றிக் கொண்டான். பின்னர் பாபாவும் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பக்தர்கள் யாவருமே பாபா படிப்பதைப் பார்த்ததில்லை. ஆனால், பாபாவுக்கு மிக நுட்பமான வேதாந்தக் கருத்துக்களைக் கூட விளக்கிச் சொல்ல தெரியும்… பக்தர்கள் பல்வேறு புராணங்களையும், வேதாந்த நூல்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.


Representative Image. Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba History in Tamil | Sai Baba History in Tamil Part 11 | Shirdi Sai Baba History Tamil | Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Shirdi Sai Baba History | Original Sai Baba History | Sai Baba Viratham book in Tamil | Sai Baba Viratham Murai | Sai Baba Viratham Story in Tamil | Sai Baba Darshan timings | Sai Baba Vratham Procedure | Sai Baba Fasting Rules | Sai Baba Thursday Fast Procedure | Sai Baba Fasting Procedure | Shirdi Sai Baba Viratham Tamil | Sai Baba Thursday Fast Rules | Sai Baba How to pray | Sai Baba Vrat How to Do | Sai Baba Viratham Rules in Tamil | Sai Baba Fasting Rules in English | Sai Baba Fasting Rules | Sai Baba Fast Rules | Sai Baba Fasting Rules in Tamil | Sai Baba temple Darshan timings


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்