Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைகாசி விசாகம் 2023 என்றால் என்ன மற்றும் சிறப்புக்கள் | What is Vaikasi Visakam 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
வைகாசி விசாகம் 2023 என்றால் என்ன மற்றும் சிறப்புக்கள் | What is Vaikasi Visakam 2023 in TamilRepresentative Image.

ஆறுபடை வேல்முருகனுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுவது இந்த வைகாசி விசாகம் நாளைத் தான். எதற்காக இந்த நாளைக் கொண்டாடுகிறோம், அதனின் சிறப்புக்கள் என்ன என்பதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வைகாசி விசாகம் என்றால் என்ன?

முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு 'விசாகன்' என்ற பெயரும் உள்ளது. அதில் வி - என்றால் பறவை (மயில்) மற்றும் சாகன் - என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக்கூடிய முருகன் வைகாசி மாதத்தில் பௌர்ணமி அன்று அவதரித்த நாளை நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுகிறோம். மேலும் எமதர்மனின் அவதார தினமாகவும் இந்நாள் இருக்கிறது. எனவே, இந்நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டால் முருகப்பெருமானின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகம் சிறப்புக்கள்

ஒவ்வொரு ஆண்டும் அன்றைய நாளில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயில் கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அன்று இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் ஆகியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

வைகாசி விசாக தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.

அதே போல திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை வைப்பார்கள். பின்னர் முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த சிறப்பான நாளில் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.

இந்நாளில் தான் மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்றார்.

இது போல இந்த வைகாசி விசாக தினத்தில் பல சிறப்புக்கள் நடைபெற்றுள்ளது. எனவே, இந்நாளில் முருகனை மனதார நினைத்து வழிபட்டால் எல்லாம் நல்லதாவே நடக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்