Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Somavaram Amavasaya Vratham: ஈரேழு ஜென்ம பாவங்களையும் நீக்கும் வைகாசி சோமாவார அமாவாசை வழிபாடு.. பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..

Nandhinipriya Ganeshan May 30, 2022 & 08:49 [IST]
Somavaram Amavasaya Vratham: ஈரேழு ஜென்ம பாவங்களையும் நீக்கும் வைகாசி சோமாவார அமாவாசை வழிபாடு.. பலன்கள் மற்றும் பரிகாரங்கள்..Representative Image.

Somavaram Amavasaya Vratham: வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு விசேஷமான பலன்கள் உண்டு. அந்த வகையில், அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் சோமவார அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. சோமவாரம் என்றால் திங்கட்கிழமையை குறிக்கிறது. இந்நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மற்ற நாளில் வரும் அமாவாசையை விட சோமவார அமாவாசையில் விரதம் (somavara vratham) இருந்தால் பன்மடங்கு பலன் கிடைக்குமாம். 

வைகாசி சோமவார அமாவாசை வழிபாடு:

இந்நாளில் உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கவும், பாவங்கள் நீங்கவும், ஆசைகள் நிறைவேறவும், நினைத்ததை அடையயும் இம்மாதிரியான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

பித்ருக்கள் வழிபாடு:

பொதுவாக, ஒவ்வொரு அமாவாசையிலும் பித்ருக்களை நினைத்து பித்ரு தர்ப்பணம் கொடுப்பது வம்சத்தை தழைக்கச் செய்யும். அதன்படி, இந்த சோமவார அமாவாசையில் உங்களுடைய பித்ருக்களை நினைத்து தண்ணீரில், எள்ளு கலந்து வீட்டில் இறைத்து எளிய வழிபாடு மேற்கொள்ளலாம். அதேபோல், இந்த சிறப்புமிக்க நாளில் பித்ருக்களுக்கு உகந்த புடலங்காயை கொண்டு சமையல் செய்வது மிகுந்த நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். 

அரசமர வழிபாடு:

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையும் இணைந்த இந்த அற்புத நாளில் அரச மரத்தை வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். வலம் வரும் போது அந்த அரச மரத்தை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

சிவன்-பார்வதி வழிபாடு:

சோமவார அமாவாசையில் சிவன் மற்றும் பார்வதி அம்பாளை வழிபட்டு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, குடும்ப உறவு பலப்படும். சிவன் கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம் அல்லது வீட்டில் இருந்தும் வழிபாடு செய்யலாம். இன்றைய தினத்தில் வீட்டில் லிங்கத்தை வைத்திருப்பவர்கள் அதற்கு தயிர், பால், பன்னீர், இளநீர், குங்குமம், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். உங்களிடம் எந்த அபிஷேகப் பொருட்கள் இருக்கிறதோ அதை வைத்து அபிஷேகம் செய்து, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவ ஸ்தோத்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யலாம். இதன் மூலம் ஈரேழு ஜென்ம பாவங்களும் நீங்குவதாக ஐதீகம்.

விநாயகர் வழிபாடு:

நம்முடைய கனவுகள், ஆசைகள், வேண்டுதல் நிறைவேற இந்த மங்களகரமான நாளில் விநாயகரை வழிபாடு செய்வதும் மிகுந்த பலன்களை கொடுக்கக் கூடியது. அதற்கு விநாயகருக்கு உகந்த அரச மர இலைகளை பறித்து வந்து ஒற்றைப்படையில் (3, 9 இந்த மாதிரி) விநாயகருக்கு முன்பாக வைத்து அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி விநாயகருக்கு உகந்த மந்திரங்களை உச்சரித்து தேங்காய் உடைத்து வழிபடலாம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய ஆசைகளும் வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். 

பரிகாரம்: பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சரிசி-வெல்லம் ஆகியவற்றை தானம் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தொடர் தோல்விகள் நீங்கி வெற்றியை அடைவீர்கள்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்