Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

தமிழ் வருடம் எத்தனை? 2023 நடப்பு ஆண்டின் பெயர் என்ன? | Tamil Year Names in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தமிழ் வருடம் எத்தனை? 2023 நடப்பு ஆண்டின் பெயர் என்ன? |  Tamil Year Names in TamilRepresentative Image.

ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்தும் தமிழ் புத்தாண்டிற்கும் கொடுக்கப்படுகிறது. பொதுவாக, ஆங்கில புத்தாண்டிற்கு என்று தனியொரு பெயரும் கிடையாது. ஆனால், தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. அது மொத்தம் 60 ஆகும். எப்படி, 12 தமிழ் மாதங்களுக்கு பெயர்கள் இருக்கின்றனவோ, அதுபோல இந்த 60 தமிழ் வருடங்களுக்கும் பெயர்கள் இருக்கின்றன.

முதல் தமிழ் வருடம் பிறந்தது எப்படி?

வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப்பாதையாக 360 பாகைகளை கொண்டு விளங்குகிறது. இதில் ஜோதிடத்தில் முக்கியமான 27 நட்சத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன்வழியாகவே 9 கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியிருக்கின்றன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் மட்டும் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒரு முறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது. 

அதேபோல், குரு ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான் வட்டத்தை சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான் வட்டத்தை சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன. சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நட்சத்திரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது. இதுவே 'பிரபவ வருடம்'. இது தான் தமிழ் ஆண்டின் முதல் வருடம் ஆகும். 

தமிழ் வருடங்கள் 60 பெயர்கள்:

எண்

தமிழ் வருடம் பெயர்

தமிழ் வருடம்

1

பிரபவ

1987-1988

2

விபவ

1988-1989

3

சுக்ல

1989-1990

4

பிரமோதூத

1990-1991

5

பிரசோற்பத்தி

1991-1992

6

ஆங்கீரச

1992-1993

7

ஸ்ரீமுக

1993-1994

8

பவ

1994-1995

9

யுவ

1995-1996

10

தாது

1996-1997

11

ஈஸ்வர

1997-1998

12

வெகுதானிய

1998-1999

13

பிரமாதி

1999-2000

14

விக்கிரம

2000-2001

15

விஷூ

2001-2002

16

சித்திரபானு

2002-2003

17

சுபானு

2003-2004

18

தாரண

2004-2005

19

பார்த்திப

2005-2006

20

விய

2006-2007

21

சர்வசித்தி

2007-2008

22

சர்வதாரி

2008-2009

23

விரோதி

2009-2010

24

விக்ருதி

2010-2011

25

கர

2011-2012

26

நந்தன

2012-2013

27

விஜய

2013-2014

28

ஜய

2014-2015

29

மன்மத

2015-2016

30

துன்முகி

2016-2017

31

ஹேவிளம்பி

2017-2018

32

விளம்பி

2018-2019

33

விகாரி

2019-2020

34

சார்வரி

2020-2021

35

பிலவ

2021-2022

36

சுபகிருது

2022-2023

37

சோபகிருது

2023-2024

38

குரோதி

2024-2025

39

விசுவாசுவ

2025-2026

40

பரபாவ

2026-2027

41

பிலவங்க

2027-2028

42

கீலக

2028-2029

43

சௌமிய

2029-2030

44

சாதாரண

2030-2031

45

விரோதிகிருது

2031-2032

46

பரிதாபி

2032-2033

47

பிரமாதீச

2033-2034

48

ஆனந்த

2034-2035

49

ராட்சச

2035-2036

50

நள

2036-2037

51

பிங்கள

2037-2038

52

காளயுக்தி

2038-2039

53

சித்தார்த்தி

2039-2040

54

ரௌத்திரி

2040-2041

55

துன்மதி

2041-2042

56

துந்துபி

2042-2043

57

ருத்ரோத்காரி

2043-2044

58

ரக்தாட்சி

2044-2045

59

குரோதன

2045-2046

60

அட்ச

2046-2047


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்