Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month Special

Gowthami Subramani Updated:
செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month SpecialRepresentative Image.

ஆன்மீகத்தில் சித்திரை மாதம் முதல் மாதமாகவும், பங்குனி மாதம் கடைசி மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த தமிழ் மாதங்களின் தொடக்கமானது ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது தொடங்கும். அதன் படி, சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமானது சித்திரை மாதமாகும். தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக விளங்கும் இந்த சித்திரை திருநாளானது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புத் திருநாளின் சிறப்புகளைப் பற்றி இதில் காணலாம்.

செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month SpecialRepresentative Image

சித்திரை மாத சிறப்புகள்

சித்திரை தொடக்க நாளானது, வருடத்தின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது.

ஆண்டின் முதல் நாளான இந்நாளில், சூரியனை வழிபடக்கூடிய சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கமாகக் கருதப்படுகிறது.

அதாவது, வேப்பம் பூவுடன் புளி, வெல்லம் ஆகியவை சேர்த்து செய்யப்படும். இவ்வாறு சேர்க்கும் போது, இனிப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும்.

சித்திரை வளர்பிறை துவிதியையில், கிருத யுகம் பிறந்தது.

சித்திரை வளர்பிறை சப்தமி தினத்தில் தான் கங்கை நதி பிறந்தது.

சித்திரை மாத வளர்பிறை திரயோதசியில், மத்ஸ்ய அவதாரம் நடந்தது.

மேலும், வராஹ அவதாரமானது சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் நடந்தது.

இவை அனைத்தும் சித்திரை மாத சிறப்புகளாகும்.

செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month SpecialRepresentative Image

சித்திரை பௌர்ணமி

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியைப் போல் அல்லாமல், சித்திரை மாத பௌர்ணமிக்கு என தனிச்சிறப்பு உள்ளது. சித்ரா பௌர்ணமி என அழைக்கப்படும் இந்நன்னாளன்று நிலவின் முழு வெளிச்சத்தால், பூமியின் சில பகுதிகளில் இருந்து ஒரு வகையான உப்பு வெளிவரும். இதனைச் சித்தர்கள், பூமி நாதம் என அழைப்பார்கள். இது பொதுவாக மருத்துவத் துறையில் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.

செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month SpecialRepresentative Image

சித்திரை மாத விழாக்கள்

மாதந்தோறும் நிறைய திருவிழாக்கள் வருகின்றன. அதிலும், குறிப்பாக சித்திரை மாதத்தில் வரும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சித்திரை மாதத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருநாள் கொண்டாடப்படும். இந்த விழாவானது கிட்டத்தட்ட 12 நாள்கள் நடைபெறும். இந்த விழாவில், மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். மேலும், கள்ளழகர் எதிர்சேவை, தேரோட்டம் நிகழ்தல், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு, தசாவதாரம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுவது வழக்கமாகக் கருதப்படுகிறது.

செல்வ வளம் தரும் சித்திரை மாத்தின் சிறப்புகள்…! | Chithirai Month SpecialRepresentative Image

அட்சய திருதியை

சிறப்பு மாதமான சித்திரை மாதத்தில் தான் அட்சய திருதியை நன்னாளும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், நகை வாங்குவது சிறப்பு எனக் கூறுவர். ஆனால், நகை மட்டுமல்ல. அரிசி, கோதுமை, பழங்கள், தானியங்கள், தயிர், மோர் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்குத் தானம் செய்வது சிறந்தது.

இவ்வாறு தானம் செய்வதால், மன அமைதி கிடைக்கும் எனவும், செல்வம் பெருகும் எனவும் கூறுவர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்