Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Ayilyam Natchathiram : ஆயில்யம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் எது?

Manoj Krishnamoorthi September 17, 2022 & 18:00 [IST]
Temple For Ayilyam Natchathiram : ஆயில்யம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் எது?Representative Image.

நம் இந்து சமயத்தில் ஜோதிட சாஸ்திரத்தில் நம் மனநிலைக்கு உரிய கிரகம் சந்திரன் ஆவார். சந்திரனை ராசியின் அதிபதியாக கொண்ட  கடக ராசியின் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் எந்த ஸ்தலத்துக்கு சென்றால் சிறப்பு, எப்படி செல்வது என்பதை அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

ஆயில்யம் நட்சத்திர கோவில் (Temple For Ayilyam Natchathiram)

சிறந்த புத்திமானாகவும் பலம் நிறைந்தவராகவும் இருக்கும் ஆயில்யம் நட்சத்திரக்காரர் தன் மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசும் யதார்த்த குணம் கொண்டவர்கள். இவர்கள் நட்சத்திரத்துக்கு உரிய கோவில் திருந்துதேவன்குடி கற்கடகேஸ்வரர் கோவில் ஆகும். எப்போதும் தன்னை பற்றி பெருமையாக சிந்திக்கும் தற்பெருமைக்காரர்கள் ஆகிய ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆலயத்திற்கு செல்லுதல் நன்மை அளிக்கும்.  

தல சிறப்பு (Temple For Ayilyam Natchathiram)

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு உரிய தோஷங்களை நிவர்த்தியாக இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தல் வேண்டும். துர்வாசரின் சாபத்தால் நண்டாக மாறிய கந்தர்வனுக்கு சாப  விமோசனம் அளித்த ஸ்தலமாகும்.  

நண்டாக மாறிய கந்தர்வன் சாப விமோசனம் பெற  தினமும் இரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலரை கொண்டுவந்து ஈசனுக்கு சாத்தி வழிபட்டு வந்தான்.  அதிகாலையில் இந்திரன் ஈசனுக்கு தாமரை பூ வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் தனக்கு முன்னால் யார்  கோமுக தாமரை வைத்தார் என்பதை காண இந்திரன் இரவில் கண்காணித்த போது தீர்த்த குளத்திலிருந்து தாமரை ஈசனிடம் வந்ததை பார்த்து வியந்தான். அப்போது 'துர்வாசரின் சாபத்தால் நண்டாக மாறிய கந்தர்வன் மலர் கொண்டு என்னை பூசித்தான், உன்னைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டான்' என ஈசனிடம் இருந்து அசரீரி வந்தது.  இவ்வாறு நண்டாக மாறிய கந்தர்வன் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தமையால் இது கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய கோவிலாக போற்றப்படுகிறது. 

இப்படி தான் பூஜை செய்யும் லிங்கத்தில் ஒரு நண்டு பூஜிப்பதா..? என ஆணவத்தில் லிங்கத்தின் மீது நின்ற நண்டை கொல்ல வாளால் வெட்டினான். அப்போது நண்டாக இருந்த கந்தர்வன் துளையிட்டு லிங்கத்திற்குள் சென்று சாப விமோசனம் பெற்றான். ஆனால் வாள் லிங்கத்தின் மீது பட்டு காயம் ஏற்பட்டது, இன்று அந்த காயத்தை நாம் லிங்கத்தில் பார்க்கலாம்.  தன் தவறை உணர்ந்த இந்திரனை ஈசன் மன்னித்து அறிவுரை அளித்தார். இந்திரன் ஆணவம் தொலைந்து மனம் திருந்திய இடம் திருந்துதேவன்குடி எனப்பட்டது.

இந்த ஸ்தலத்தில் இருக்கும் விநாயகப்பெருமான் கற்கடக விநாயகர் என்று போற்றப்படுவார்.  இத்தல ஈசன் சுயம்பு லிங்கம் ஆகும், மேலும் இங்கு இரு அம்மாள் அடுத்தடுத்த சன்னதி கொண்டு இருப்பது சிறப்பாகும்.  கிரக தோஷ நிவர்த்தியாக ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கற்கடகேஸ்வரர் ஆலயத்தில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தல் வேண்டும். அபிஷக நல்லெண்ணெய் உடலில் தேய்து கொள்வது சர்ம நோய்களை தீர்க்கும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்