Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Bharani Nakshatra : இந்த ஸ்தலத்துக்கு செல்வதால் பரணியில் பிறந்த நீங்கள் தரணி ஆள முடியுமா....!

Manoj Krishnamoorthi August 13, 2022 & 16:30 [IST]
Temple For Bharani Nakshatra : இந்த ஸ்தலத்துக்கு செல்வதால் பரணியில் பிறந்த நீங்கள் தரணி ஆள முடியுமா....!Representative Image.

செவ்வாய் பகவானை ராசியின் அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் திறமைகளில் வல்லவர்களாக இருப்பர், 12 ராசியின் முதன்மையான  மேஷ ராசியின் பரணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் செல்ல வேண்டிய கோவில் பற்றி தெரிந்து கொள்ள  இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும். 

பரணி நட்சத்திரம் செல்ல வேண்டிய கோவில் (Temple For Bharani Nakshatra) 

அரசனைப் போல சுகபோக வாழ்வை எதிர்பார்க்கும் பரணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் தேவையை சாதுரியமாக சாதித்து கொள்ளும் திறமை கொண்டவர்கள் ஆவர்.  மருத்துவம் குணம் அதிகம் கொண்ட பரணி நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு, நான்கு பாத பரணி நட்சத்திரக்காரர்கள் கீழ் வரும் தலத்திற்கு செல்வது மிகவும் சிறப்பாகும். இயற்கையாகவே ஆளுமை திறன் கொண்ட பரணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடி  அக்னீஸ்வரர் கோவில் செல்ல வேண்டும்.

முக்கியமாக பரணி நட்சத்திரக்காரருக்கான தோஷங்கள் நிவர்த்தி அடைய நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள இத்தல இறைவனை வணங்கினால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி போன்ற வரங்களை பெறலாம்.

தல சிறப்பு (Nalladai Sri Agneeswarar Temple In Tamil)

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் இத்திருத்தலம் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது, இந்த திருத்தலத்தில் குடி கொண்டு இருக்கும் ஈசன் அக்னி சொரூபமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.  மேற்கு திசை நோக்கி இருக்கும் சிவனுக்கு பரணி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் ஹோமம்  செய்து வழிபட்டால் இரட்டிப்பு பலனை பெற முடியும்.

இத்திருத்தலத்தில் குடிகொண்டு இருக்கும் ஈசன் உக்கிரமாக இருப்பதாலும் அக்னி சொரூபம் கொண்டமையாலும் இந்த தலத்தின் மூலஸ்தானத்தை சுற்றி நீர் இருப்பது ஒரு சிறப்பாகும். 

இந்த தலத்தில் குடியிருக்கும் அம்மாள் சுந்திரநாயகி ஆவர், மேலும் விநாயகர், முருகன், சரஸ்வதி, லட்சுமி, விஷ்ணு, பைரவர், துர்க்கை, சனீஸ்வரர் போன்ற இதர தெய்வங்களும் சன்னதி உண்டு.  ஒவ்வொரு மாதமும் இங்கு பரணி நட்சத்திர்த்துக்கு பரிகார சிறப்பு பூஜை நடக்கும். 

எப்படி செல்லும்? (Bharani Natchathiram Kovil Route)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்லாடை என்னும் ஊரில் இந்த அக்னீஸ்வரர் கோவில் உள்ளது, இந்த திருத்தலம் செல்ல மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாகக் காரைக்கால் செல்லும் வழியில் 15 கீ,மி தொலைவில் நல்லாடை என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Temple For Bharani Nakshatra | Temple For Bharani Natchathiram | Bharani Natchathiram Kovil | Bharani Natchathiram Poga Vendiya Kovil | பரணி நட்சத்திர கோவில் | அக்னீஸ்வரர் கோவில் |  Bharani Natchathiram Poga Vendiya Kovil In Tamil | அக்னீஸ்வரர் கோவில் சுந்திர நாயகி |Bharani Nakshatra Temple In Tamilnadu | Which Is Bharani Nakshatra Temple | Bharani Natchathiram Kovil Route | Bharani Natchathiram Kovil Special Route | Bharani Natchathiram Kovil Special | Nalladai Sri Agneeswarar Temple In Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்