Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Ashwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரக்காரரே... நீங்கள் கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..!

Manoj Krishnamoorthi August 12, 2022 & 18:15 [IST]
Temple For Ashwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரக்காரரே... நீங்கள் கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..!Representative Image.

மனிதன் ஜகத்தில் ஜனித்த மணித்துளியின் கணநேர முதல் அவனின் நட்சத்திரம் கணிக்கப்படும், அவன் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவன் வாழ்நாள் எப்படி இருக்கும்..? அவனின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்கும் என்பதையும் அறியலாம். உங்களுக்கு அஸ்வினி நட்சத்திரமா நீங்கள் வழிபட செல்ல வேண்டிய தலம் எது என்று அறிய வேண்டுமா.... எங்கள் பதிவு உங்களுக்கு தெளிவுபடுத்தும்.

Also Read: மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!

அஸ்வினி நட்சத்திரம்  செல்ல வேண்டிய கோவில் (Ashwini Natchathiram Poga Vendiya Kovil)

12 ராசியின் முதன்மை ராசியான மேஷ ராசியின் முதன்மை நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் செல்ல வேண்டிய கோவில் (Temple For Ashwini Nakshatra In Tamil)  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருக்கும் அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும்.

மருத்துவ குணம் நிறைந்த நட்சத்திரமெனக் கருதப்படும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமான சரிதம் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்கள் பிறந்த அஸ்வினி நட்சத்திர தினத்தன்று சென்று வர நன்மை அளிக்கும். ஒருவேளை அடிக்கடி செல்ல முடியாத நிலையில் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஸ்தலத்துக்கு சென்று வரவேண்டும். 

தலத்தின் சிறப்பு (Temple For Ashwini Nakshatra In Tamil)

மனதில் தைரியத்தை விதைக்கும் இத்திருத்தல சிவன் மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். முக்கியமாக இந்த திருக்கோயிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி திருநாளில் ஈசனை வழிபாடு செய்வது மனதில் உள்ள பயத்தை அழித்து தன்னம்பிக்கை அளிக்கும்.

இந்த திருத்தலத்தில் அம்மாளுக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றினால் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் பெற்ற தோஷங்கள் அகலும் என நம்பப்படுகிறது.  கலைகளில் வல்லவர்களான அஸ்வினி நட்சத்திரக்காரர், இத்திருத்தலத்தில் சிவனை வழிபடுவதால் கற்கும் கலைகளில் முதன்மை பெற்று திகழ முடியும். முக்கியமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்கள் இந்த திருத்தல சிவனை வழிபடுவது நல்ல வித்திய பலன் அளிக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த திருத்தலத்தில் குடி கொண்ட பெரிய நாயகி அம்மாளை வணங்குவது சுமங்கலி பாக்கியம் அளிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். '

Most Read: மிருகசீரிடத்தில் பிறந்த  நீங்கள் இந்த திருக்கோவில் சென்று பாருங்க.. வேறலெவல் வாழ்க்கை தான்..!

எப்படி செல்வது? (Thiruthuraipoondi Piravi Marundeeswarar Temple Route)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையம் வர வேண்டும். 

ஒருவேளை பேருந்து மார்க்கமாக செல்ல நினைத்தால் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு உள்ளது, பேருந்து நிலைத்தில் இருந்து பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நடந்து செல்லும் தூரத்தில் தான்  உள்ளது.  

Also Read: எந்த கிழமையில் என்ன செய்தால் நன்மை.... அப்போது இது வாங்கலாமா..?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்