Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Temple For Karthigai Natchathiram : நட்பு குணம் மிகுந்த கிருத்திகை நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில்..!

Manoj Krishnamoorthi August 16, 2022 & 11:40 [IST]
Temple For Karthigai Natchathiram : நட்பு குணம் மிகுந்த கிருத்திகை நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில்..!Representative Image.

மனிதனின் வாழ்வியலைக் கணக்கெடுக்கும் முறையே ஜோதிடமாகும், மனிதனின் குணம் மற்றும் செயலையும் யோதிடத்தில் கணிக்க முடியும். இவற்றை நட்சத்திரங்களின் உதவியால் கணிக்க முடியும் என்பது ஜோதிடர்களின் கருத்து ஆகும். மனிதனின் வாழ்வியலைத் தீர்மானிக்கும் 27 நட்சத்திரங்களில்  மேஷம் மற்றும் ரிஷபத்தில் இருக்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆன்மீக ஸ்தலம் பற்றி காண்போம். 

கிருத்திகை நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் (Karthigai Natchathiram Kovil)

நட்பு குணம் அதிகம் கொண்ட நட்சத்திரம் என்றால் கிருத்திகை நட்சத்திரம் தான் முதலிடம் வகுக்கும், எளிதில் அனைவருடன் நட்பாகப் பழகும் குணம் கொண்ட இவர்கள் நல்ல நண்பராக  இருக்க முடியும். இயற்கையாகவே வலுவான உடல் கொண்ட கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் அடிக்கடி செல்ல வேண்டிய கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். 

கிருத்திகை நட்சத்திரக்காரர் இந்த திருக்கோவில் வந்து வழிபாடு செய்வது இவர்களுக்கு திருமணத்தடை, நிதி பிரச்சனை, குடும்பத்தில் இருக்கும் சண்டைகள் போன்றவை நிவர்த்தி செய்து நலமான வாழ்க்கை வாழ வழி செய்யும். முக்கியமாக பிரதோஷ தினத்தில் அல்லது கார்த்திகை  நட்சத்திர தினத்தன்று கிருத்திகை நட்சத்திரக்காரர் இத்திருத்தலம் செல்வது சிறப்பாகும். 

தல சிறப்பு ( Temple For Karthigai Nakshatra)

சிவ பெருமான் மூலவரான இத்திருத்தலத்தில் ஈசன் சுயம்பு லிங்கம் ஆகும், கார்த்திகை மாதம் மகத்துவம் கொண்ட இத்திருக்கோயில் 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்ஞ்சார நாயனார் அவர்கள் முக்தி பெற்ற தலமாக கருதப்படுகிறது. 

தமிழ் கடவுள் முருகன் பிறக்க ஈசன் தன் நெற்றிக் கண்ணை திறந்தபோது ஆறு ஜோதிகளாக தோன்றிய முருகன் தோன்றிய சிறப்பு ஸ்தலமாகும். இந்த ஆறு ஜோதிகளின் உருவம் கொண்ட கார்த்திகேயனை வளர்க்க கார்த்திகை பெண்கள் அவதரித்த தலமாகும். பின்னர் அந்த ஜோதியும் ஒன்று இணைந்த ஆறுமுகம் தினமும் வழிபடும் ஸ்தலம் என்னும் பெருமை கொண்டது. 

எப்படி செல்லுவது? (Temple For Karthigai Natchathiram)

காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் செல்ல முதலில் நாகப்பட்டினம் வர வேண்டும், மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சானகரம் என்னும் ஊரில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது. பேருந்து அல்லது இரயில் எந்த வழி பயணமாக இருந்தாலும் மயிலாடுதுறை வர வேண்டும், பின் அங்கு இருந்து பூம்புகார் செல்லும் வழியில் இந்த கோவிலை அடையலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Temple For Karthigai Natchathiram | Temple For Karthigai Nakshatra  | காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் செல்லும் வழி | மயிலாடுதுறை காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் | கிருத்திகை நட்சத்திரம் கோவில் | Karthigai Natchathiram Poga Vendiya Kovil | Temple For Karthigai Nakshatra In Tamil | Temple For Karthigai Natchathiram In Tamil | Karthigai Natchathiram Kovil | Karthigai Natchathiram Temple | Karthigai Natchathiram Sella Vendiya Kovil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்