Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாசி மகம் தினத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.! | Things to Do in Masi Magam in Tamil

Gowthami Subramani Updated:
மாசி மகம் தினத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.! | Things to Do in Masi Magam in TamilRepresentative Image.

மாசி மகம் சிறப்பு தினத்தில் கும்பகோணம் குளத்தில் நீராடி குளிப்பது வழக்கம். இந்த தினத்தில், குளத்தில் நீராட முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடுவதன் மூலம், மகாமகம் குளத்தில் நீராடி பலனைப் பெறலாம். இந்த சிறப்பான நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம்  ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். இந்த தினத்தில் நீராடுவது மட்டுமல்லாமல், தானங்கள் கொடுப்பதும் விசேஷமான ஒன்றாகும். அந்த நேரத்தில் 20 வகையான தானங்களை வழங்கலாம் எனக் கூறுவர்.
 

மாசி மகம் தினத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.! | Things to Do in Masi Magam in TamilRepresentative Image

20 வகையான தானங்கள்

மாசி மகம் தினத்தன்று, தானங்களை வழங்குவதற்கும் ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், கீழ்க்காணும் தானங்களை மாசி மகம் தினத்தன்று அளிப்பது சிறந்ததாகும்.

✤ பூமி தானம்

✤ ஸ்வர்ண தானம்

✤ பூணூல் தானம்

✤ கோ தானம்

✤ அஸ்வ தானம்

✤ அன்ன தானம்

✤ காளை தானம்

✤ பாயஸ தானம்

✤ தான்ய தானம்

✤ காளை தானம்

✤ குப்த தானம்

✤ சந்தன தானம்

✤ நவரத்ன தானம்

✤ முத்து தானம்

✤ தேன் தானம்

✤ மாதுளம் பழ தானம்

✤ உப்பு தானம்

✤ ஸ்வர்ண தானம்

✤ திருமணத்துக்கான தானம்

✤ தென்னங்கன்று தானம்

இந்த 20 வகையான தானங்களை மாசி மகம் தினத்தில் அளிப்பது விசேஷமானது ஆகும்.

மாசி மகம் தினத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.! | Things to Do in Masi Magam in TamilRepresentative Image

குப்த தானம் என்பது பூசணிக்காய், இளநீர், அல்லது பலாப்பழம் போன்றவற்றில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு துளையிட்டுக் கொள்ளலாம். அந்த துளையில் ஸ்வர்ணம், வெள்ளி, வைடூரியம், ரத்னம், வைரம், முத்து போன்றவற்றை நிரப்பி துளையை மூடி, அப்படியே வழங்குவதே குப்த தானம் எனப்படுகிறது.

மாசி மகா தினத்தில் கோவிலுக்குச் சென்று நீராடி வணங்குவது மட்டுமல்லாமல், இது போன்ற தானங்களை வழங்குவதன் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்