Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீபம்: உங்கள் ஊரில் இருந்து தி.மலைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ், ரயில்கள் எவை? 

Kanimozhi Updated:
கார்த்திகை தீபம்: உங்கள் ஊரில் இருந்து தி.மலைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ், ரயில்கள் எவை? Representative Image.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள், மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. உங்கள் ஊரில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் மற்றும் பேருந்து குறித்த தகவல்களை காணலாம்... 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையடுத்து முன்னிட்டு திருவண்ணாமலை செல்ல உள்ள பக்தர்களுக்காக விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

திருக்கோயிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகளும், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. திருவண்ணாமலைக்கு இன்று முதல் 8ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலை செல்ல உள்ள சிறப்பு ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கான சிறப்பு ரயில் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை இயக்கப்படும்.  அதேபோல் தாம்பரம் - திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயிலும் நாளையும், நாளை மறுநாளும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கார்த்திகை தீபத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

டெல்டா மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம், மயிலை வழியாக திருவண்ணாமலைக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

திருச்சி வேலூர் இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் காலையில் 05.40 மணிக்கு திருச்சியில் புறப்படும். தொடர்ச்சியாக தஞ்சையில் காலை 06.35க்கும்,  பாபநாசத்தில் காலை 06.56க்கும், கும்பகோணத்தில் காலை 07.10 க்கும், மயிலாடுதுறையில் காலை 08.25 மணிக்கும் பயணித்து, காலை 11.50 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா?

மறு மார்க்கத்தில் அதே தினங்களில் வேலூரில் இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்டும் ரயிலானது, திருவண்ணாமலைக்கு 10.20க்கும், மயிலாடுதுறைக்கு மறுநாள் அதிகாலை 02.40க்கும்,  கும்பகோணத்திற்கு 03.15க்கும், பாபநாசம் - 03.30க்கும்,  தஞ்சைக்கு 4 மணிக்கும், திருச்சிக்கு அதிகாலை 5 மணிக்கும் சென்றையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்