Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 16:30 [IST]
கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image.

தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை தான் இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் எங்கும் அகல் விளக்குகளை ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். வீடுகள் மட்டுமல்லாமல், கோவில்களும் இந்நாளில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். மேலும், இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம் தான். பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றிய பிறகு தான் வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image

கார்த்திகை தீபம் 2022 எப்போது?

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகையில் வரும் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலையில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.  

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image

கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்

திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றலாம். அதுவே நல்ல நேரமாகும். வாசலின் இரு முனையில் வைக்கப்படும் இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருக்க வேண்டும். மீதம் உள்ள இடங்கள் பழைய விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஆனால், பழைய விளக்குகளை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த வருடம் கார்த்திகை தீப பண்டிகை செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே, அன்று விளக்குகளை கழுவக் கூடாது. 

விளக்குகளை கழுவியப் பிறகு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு போல திரி போட்டு, தீபம் ஏற்றப்பட வேண்டும். இப்படி ஏற்றபடும் தீபங்கள் சரியான எண்ணிக்கையில் ஏற்றப்பட வேண்டியது அவசியம். அதேபோல், ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் தீபம் போடுவதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image

விளக்குகளின் எண்ணிக்கை

பொதுவாக, கார்த்திகை தீபத்தன்று 27 விளக்குகளை பூஜை அறையில் ஏற்றினால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி 27 விளக்குகள் போடமுடியவில்லை என்றாலும், 9 விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். அடுத்ததாக, வீட்டின் ஹாலில் 9 தீபங்கள், சமையலறையில் 7 தீபங்கள், படுக்கை அறையில் 6 தீபங்கள், வாசலில் குத்துவிளக்கு ஏற்றி 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். 

அதேபோல், இந்நாளில் கோயில்களில் ஏற்றும் போதும் விளங்குகளின் எண்ணிக்கையில் கவனம் இருக்க வேண்டும். அதன்படி, விநாயகப் பெருமானுக்கு 7 தீபங்கள், முருகருக்கு 6 தீபங்கள், பெருமாளுக்கு 5 தீபங்கள், நாக அம்மனுக்கு 4 தீபங்கள், சிவப் பெருமானுக்கு 3/9 தீபங்கள், அம்மனுக்கு 2 தீபங்கள், மஹா லஷ்மிக்கு - 8 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image

எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்?

ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முக தீபம் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும், மூன்று முக தீபம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், நான்கு முக தீபம் ஏற்றினால்  செல்வம் பெருகும், ஐந்து முக தீபம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும். இப்படி சகல செல்வங்களையும் பெற 3 நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். 

நீங்க ஏற்றிய விளக்கு குறைந்தது 10 - 15 நிமிடங்களாவது எரிய வேண்டும். அதே சமயத்தில் வீட்டில் கதவு, ஜன்னல்கல் திறந்து இருக்க வேண்டியது அவசியம். காற்று அடிக்கிறது என்று மூடி வைக்க கூடாது. 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..Representative Image

விளக்கேற்றும் திசை & முறை:

கார்த்திகை தீபத்திருநாளில் வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும், மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும், கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். எக்காரணத்திற்காகவும் தெற்கு திசை நோக்கு விளக்கு ஏற்ற வேண்டாம். 

சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் கொண்டு வீட்டில் விளக்கேற்றலாம். ஆனால், நெய்யையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கேற்ற கூடாது. அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.

பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்றுங்கள். தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஒருபோதும் அணைக்க கூடாது. 

எனவே, வாழ்க்கையில் மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுங்கள். அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்